ஆடையால் அனைவரையும் கவர்ந்த அனுஷ்கா சர்மா

Report Print Deepthi Deepthi in நவீன அழகு

மும்பையில் நடைபெற்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி - அனுஷ்கா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பாலிவுட் பிரபலங்கள் மற்றும் கிரிக்கெட் நட்சத்திரங்கள் பங்கேற்று வாழ்த்தினர்.

இத்தாலியில் திருமணம் செய்து கொண்ட இவர்கள், டெல்லி மற்றும் முன்னை என இரு நகரங்களிலும் வரவேற்பு நிகழ்ச்சியை நடத்தினர்.

திருமணம் மற்றும் வரவேற்பு அனைத்திலும் அனுஷ்கா சர்மா தான் அணிந்திருந்த ஆடையால் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். திருமணத்திற்கு மட்டும் லட்சக்கணக்கில் ஆடை அணிகலன்கள் அணிந்திருந்தார்.

அனுஷ்காவின் திருமண ஆடைகளை ஆடை வடிவமைப்பாளரான சப்பாசிச்சி முகர்ஜி வடிவமைத்து உள்ளார்.

மும்பையில் நேற்று நடைபெற்ற திருமணத்தில், சாம்பல் நிறத்திலான லெஹெங்காவை அனுஷ்கா அணிந்திருந்தார்.

organza மலர்கள், textured sequins மற்றும் வெள்ளியிலான நூல்களை கொண்டு இந்த ஆடை தயாரிக்கப்பட்டுள்ளது,

நெக்லஸ் மற்றும் காதணி ஆகிய இரண்டும் வைரங்கள் பதிக்கப்பட்டு ரோஜா வடிவில் தயார் செய்யப்பட்டன.

விராட் கோஹ்லி, Indigo velvet navy blue bandhgala அணிந்திருந்தார்.

மேலும் நவீன அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...