வைரலாகும் ஐஸ்வர்யா ராயின் புகைப்படம்

Report Print Printha in நவீன அழகு

உலக அழகி ஐஸ்வர்யா ராய் பிரான்ஸில் நடைபெற்று வரும் 70-ஆவது கான் திரைப்பட விழாவில் சின்ட்ரெல்லா ஆடை அணிந்து சிவப்பு கம்பளத்தில் வலம் வந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் தீவிரமாக பரவி வருகிறது.

கான் திரைப்பட விழாவில் 15வது வருடமாக ஐஸ்வர்யா ராய் பச்சன் கலந்து கொண்டு அசத்தியுள்ளதை பார்த்து, ஐஸ்வர்யாவை சின்ட்ரெல்லா என்றும், சிலர் பார்பி டால் என்றும் சமூக வலைத்தளங்களில் புகழ் பாரட்டி வருகின்றனர்.

மேலும் இன்ஸ்டாகிராமிலும் ஐஸ்வர்யா ராய் அணிந்து வந்திருந்த ஆடை குறித்து பெரிதும் கூறியதுடன், ஐஸ்வர்யா ராயிக்கு பத்து வயது குறைந்தது போல் தோன்றவில்லையா ? என்று இந்திய பிரிவின் எல்லி நாளிதழ் பதிவிட்டிருந்தது.

ஆடை வடிவமைப்பாளரான, மைக்கெல் சின்கோ வடிவமைத்திருந்த சின்ட்ரெல்லா ஆடையை தான் ஐஸ்வர்யா ராய் அணிந்து வந்திருந்தார்.

2003ல் கான் திரைப்பட விழாவின் ஜூரி குழுவில் முதன்முதலாக இணைந்த ஐஸ்வர்யா கடந்த ஆண்டு கான் திரைப்பட விழாவில் பர்ப்பிள் நிற உதட்டு சாயம் போட்டு வந்ததற்காக சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனங்களுக்கு உள்ளானார்.

இந்த உடையை அணிந்து வந்த ஐஸ்வர்யா ராயிக்கு அவரது ஆடைய தாங்கிச் செல்ல பெரும் உதவி தேவைப்பட்டது.

ஐஸ்வர்யா ராயின் கணவரும், பிரபல நடிகருமான அபிஷேக் பச்சன் ஐஸ்வர்யா அணிந்து வந்த சின்ட்ரெல்லா உடையை பாராட்டியுள்ளார்.

மேலும் நவீன அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments