பிளாஸ்டிக் சிகிச்சையால் அலங்கோலமாக மாறிய நட்சத்திரங்கள்

Report Print Deepthi Deepthi in நவீன அழகு

திரைத்துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் எப்போதும் தங்கள் உடல் அமைப்பில் அதிக கவனம் எடுத்துக்கொள்வார்கள்.

ஏனெனில், நல்ல பிட்டான உடல் அமைப்போடும், ஜொலிக்கும் முகத்தோடும் இருந்தால் மட்டுமே இவர்களால் நீண்ட காலம் திரையுலகில் ஜொலிக்க முடியும்.

இதற்காக சிலர் அதிகமான அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டு இயற்கை அழகு கொண்ட இவர்களது முகத்தை செயற்கை அழகால் கொடூரமாக மாற்றிக்கொள்கின்றனர்.

அப்படி அறுவை சிகிச்சையால் தங்களது முகத்தை அலங்கோலமாக மாற்றிக்கொண்டவர்கள் இதோ,

Donatella Versace

பேஷன் டிசைனரான இவர் பல பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைகளை செய்துள்ளார், அதுவும் குறிப்பாக தனது முகம் மற்றும் மூக்கிற்கு பல்வேறு பிளாஸ்டிக் சர்ஜரிகளை செய்ததால், சிதைவடைந்து மற்றும் வீங்கி காணப்படுகிறது. சில நேரங்களில் பணமும் நமக்கு உதாவது என்பது இதுபோன்ற பிளாஸ்டிக் சிகிச்சையின் மூலம் தெரியவருகிறது.

Meg Ryan

ஹாலிவுட்டின் மிகப்பிரபல நடிகையான இவர் பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார். அதுமட்டுமின்றி இயற்கையாகவே மிக அழகான முகத்தோற்றம் கொண்ட இவர் Lip augmentation அறுவை சிகிச்சை செய்து கொண்டதன் விளைவாக இவர் இயற்கை தோற்றத்தை இழந்துள்ளார்.

Michel jackson

மண்ணை விட்டு மறைந்தாலும், இன்றுவரை உலக மக்களின் மனதில் வாழ்ந்துகொண்டிருக்கும் ஜாக்சன், பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைக்கு பெயர் போனவர், அதிகமான அறுவை சிகிச்சைகளை செய்து கொண்ட காரணத்தினால் இவர் உடலளவில் பல்வேறு பக்கவிளைவுகளை சந்தித்தார்.

Amanda Lepore

அமெரிக்க மொடலான இவர் மார்பக அறுவை சிகிச்சை, உதடு அறுவை சிகிச்சை செய்து மிகவும் அலங்கோலமான தோற்றத்தை பெற்றுள்ளார். இவரது வித்தியாசமான தோற்றமே மக்கள் மத்தியில் இவரை பிரபலப்படுத்தியது.

மேலும் நவீன அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments