உலகிலேயே மிக விலையுயர்ந்த நகைகள்: விலை எவ்வளவு தெரியுமா?

Report Print Deepthi Deepthi in நவீன அழகு

தங்கம், வெள்ளி, வைரம் மற்றும் பிளாட்டினம் போன்ற நகைகள் மக்கள் மத்தியில் பிரபலம் என்றாலும் இவற்றில் அதிகம் விரும்பப்படுவது வைர நகைகள்தான்.

வைரங்கள் பளிச்சென ஜொலிக்கும் காரணத்தினாலேயே அதனை அனைவரும் விரும்பி வாங்குகின்றனர்.

மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்படும் நகைகளின் விலை அதிகம் என்றாலும், உலகில் உள்ள பிரபல தொழிலதிபர்கள் மற்றும் நகை பிரியர்கள் அதனை வாங்கிகொள்கின்றனர்.

அந்த வகையில், உலகிலேயே மிகவும் விலையுயர்ந்த நகைகள் இதோ,

BLUE DIAMOND

12.3 கேரட் வைரத்தை கொண்டு வடிமைக்கப்பட்ட இந்த வைரக்கல் கடந்த 2015 ஆம் ஆண்டு சுவிஸ் நாட்டில், 48.4 டொலர் தொகைக்கு ஏலத்தில் விடப்பட்டது.இந்த வைரத்தை Hong Kong நாட்டை சேர்ந்த நபர் ஒருவர் ஏலத்தில் எடுத்துள்ளார்.

ELIZABETH TAYLOR DIAMOND

எலிசபெத் டெய்லர் மகாராணிக்கு, நடிகர் Richard Burton இந்த வைர மோதிரத்தை பரிசாக வழங்கியுள்ளார்.இந்த மோதிரம் கடந்த 2011 ஆம் ஆண்டு 8.8 மில்லியன் தொகைக்கு ஏலத்தில் விடப்பட்டது.

PRINCESS DIANA'S SAPPHIRE RING

நடுவில் நீலக்கல் வைக்கப்பட்டு அதனை சுற்றி வைரத்தால் இந்த மோதிரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.இந்த மோதிரம் பிரித்தானிய அரச குடும்பத்து மருமகளுக்கு அணிவிக்கப்படும்.மறைந்த இளவரசி டயானாவின் மறைவுக்கு பின்னர், கேட் மிடில்டன் இந்த மோதிரத்தை அணிந்துள்ளார்.

BULGARI BLUE DIAMOND RING

இரண்டு கற்கள் பொறிக்கப்பட்ட மோதிரம்.நீல நிறத்திலான முக்கோண வைரம் 10.95 கேரட் மற்றும் நிறமற்ற வைரம் 9.87 கேரட்.இந்த மோதிரம் கடந்த 2010 ஆம் ஆண்டு நியூயோர்க்கில் 15.7 டொலர் மில்லியன் தொகைக்கு ஏலத்தில் விற்பனையானது.

MOUAWAD LINCOMPARABLE

கின்னஸ் சாதனை படைத்த இந்த நெக்லஸ், 103 வைரக்கற்கள் பொறிக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.637 கேரட் கொண்ட இந்த நெக்லஸ் 55 மில்லியன் தொகை ஆகும்.

UNMOUNTED HEART-SHAPED DIAMOND

இதய வடிவிலான இந்த இந்த வைரம் 56.15 கேரட் கொண்டது.இந்த வைரம் Love At First Sight என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.கடந்த 2011 ஆம் ஆண் ஜெனிவாவில் 12 மில்லியன் டொலர் தொகைக்கு ஏலத்தில் விடப்பட்டது.

LA PEREGRINA

விலை மதிக்கமுடியாத முத்துக்கள் பொறிக்கப்பட்ட நெக்லஸ். இந்த நெக்லஸ் அதிகமாக அரசகுடும்பத்தினரால் பயன்படுத்தப்பட்டுள்ளது.இரண்டாம் கிங் பிலிப்,முதலாம் ராணியான மேரி, எலிசபெத் டெய்லர் ஆகியோர் இந்த நெக்லஸை பயன்படுத்தியுள்ளனர். கடந்த 2011 ஆம் ஆண்டு 11.8 மில்லியன் தொகைக்கு இந்த நெக்லஸ் ஏலத்தில் விற்பனையானது.

2/5

மேலும் நவீன அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments