கொழும்பில் களைகட்டிய சிறுவர் சந்தை

Report Print Akkash in நிகழ்வுகள்
62Shares

கொழும்பில் ஸ்ரீ பொன்னம்பலவானேஸ்வரர் ஆலய அறநெறி பாடசாலை மாணவ, மாணவிகளது சந்தைப்படுத்தல் செயற்பாடு களைகட்டியிருந்தது.

குறித்த சந்தைப்படுத்தல் செயற்பாடு கடந்த 17ஆம் திகதி ஒன்பது மணியளவில் ஆரம்பமாகியிருந்த நிலையில் இதில் அறநெறி பாடசாலை மாணவர்கள், ஆலய வளாகத்தில் பொருட்களை காட்சிப்படுத்தியிருந்தனர்.

அத்துடன், சிறார்கள் அனைவரும் கூடாரங்களை அமைத்து அதனுள் தாம் விற்பனைக்காக கொண்டு வந்த பொருட்களை காட்சிபடுத்தியிருந்தமையானது அனைவரையும் கவர்ந்திருந்தது.

அத்துடன், அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த பொருட்களையும் நுகர்வோருக்கு மிகவும் சாமர்த்தியமாக விற்பனை செய்திருந்தனர்.

மேலும், சிறுவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வரும் வகையிலும், சமூகத்துடன் இணைந்து செயற்படும் விதத்தினை கற்றுத் தரும் வகையிலும் இந்த சந்தைப்படுத்தல் செயற்பாடு அமைந்திருந்தாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் நிகழ்வுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்