யாழ்.கீரிமலையில் மரநடுகை நிகழ்வு

Report Print Thamilin Tholan in நிகழ்வுகள்
51Shares
51Shares
ibctamil.com

வட மாகாண மர நடுகை மாதத்தை முன்னிட்டு யாழ். கீரிமலை சித்தர்பீடத்தில் பயன்தரு மரக்கன்றுகள் நாட்டப்பட்டுள்ளன.

திருமூலர் குருபூஜை தினமான நேற்று அகில இலங்கை சைவ மகா சபையின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இதன்போது, பொன்னாலை வெண்கரம் படிப்பகத்தில் கல்வி பயிலும் பொன்னாலை வரதராஜப் பெருமாள் அறநெறி மாணவர்கள், கீரிமலை அறநெறிப் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பலருக்கும் சிவதீட்சை வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், சிவத்தமிழ் அர்ச்சகரால் செந்தமிழில் தீட்சை வழங்கப்பட்டுள்ளதுடன், மழைக்கு மத்தியிலும் மரம் நடுகை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மேலும், நிகழ்வில் சிவத்தமிழ் அர்ச்சகர்கள், அகில இலங்கை சைவ மகா சபையின் பிரதிநிதிகள், சிவதொண்டர், சிவமங்கையர் அமைப்புக்களின் தொண்டர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் நிகழ்வுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்