புலம்பெயர் கவிஞன் அனாதியன் எழுதிய இரு கவிநூல்கள் வெளியீட்டு விழா

Report Print Suman Suman in நிகழ்வுகள்
14Shares
14Shares
ibctamil.com

புலம்பெயர்ந்து இங்கிலாந்தில் வசிக்கும் முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி பகுதியைச் சேர்ந்த அனாதியன் என்கின்ற மார்க் ஜனாத்தகன் எழுதிய இரண்டு கவிதை நூல்களின் வெளியீட்டு விழா மல்லாவியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு மல்லாவி மத்திய கல்லூரி பிரதான மண்டபத்தில் முத்து ஐயன்கட்டு வலதுகரை மகா வித்தியாலய அதிபர் கம்பீரக் குரலோன் சி.நாகேந்திரராசா தலைமையில் நேற்று காலை 10.30 மணியளவில் நடைபெற்றுள்ளது.

இதன்போது, 'மனித விலங்கொன்றின் நாட்குறிப்பிலிருந்து' மற்றும் 'சீயக்காய் வாசக்காரியும், சில்வண்டுக் காதலனும்' ஆகிய கவிதை நூல்கள் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வில் மனித விலங்கொன்றின் நாட்குறிப்பிலிருந்து' கவிதை நூலினை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவக் கற்கைகள் வணிகபீட‌ பீடாதிபதி பேராசிரியர் தி.வேல்நம்பி வெளியிட்டு வைக்க, வடக்கு மாகாண சபையின் பிரதி அவைத்தலைவர் வி.கமலேஸ்வரன் முதற்பிரதியினை பெற்றுக்கொண்டுள்ளார்.

அத்துடன், 'சீயக்காய் வாசக்காரியும் சில்வண்டுக்காதலனும்' கவிதை நூலினை மல்லாவி மத்திய கல்லூரி அதிபர் சு.யேசுதானந்தர் வெளியிட்டு வைக்க, கனடா படைப்பாளிகள் உலகம் நிறுவுநர் ஐங்கரன் கதிர்காமநாதன் முதற்பிரதியினை பெற்றுக்கொண்டுள்ளார்.

மேலும், நிகழ்வில் கலை காலாச்சார நிகழ்வுகள் நடத்தப்பட்டுள்ளதுடன், வடக்கு மாகாண சபையின் பிரதி அவைத்தலைவர் வி.கமலேஸ்வரன் மற்றும் பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும் நிகழ்வுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்