நெளுக்குளம் ஸ்ரீ முருகன் ஆலயத்தில் சிறப்பாக இடம்பெறும் கந்தசஸ்டி பெருவிழா

Report Print Theesan in நிகழ்வுகள்
14Shares
14Shares
ibctamil.com

வவுனியா - நெளுக்குளம் ஸ்ரீ முருகன் ஆலயத்தில் கந்தசஸ்டி விரத பெருவிழா சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

ஆலய குரு பிரம் ஸ்ரீ வேத சரண்ய புரீஸ்வரக்குருக்கள் தலைமையில் இன்று விசேட பூஜைகள் நடத்தப்பட்டுள்ளன.

இந்த விரதத்தின் பூஜைகள் ஆறு தினங்களும் காலை, மாலை என இருவேளையும் நடைபெற்று வருகின்றது.

ஆலய அறங்காவலர் சபையின் தலைவர் சுப்ரமணியம், செயலாளர் ஜெகதீஸன், பொருளாளர் பாஸ்கரன் உட்பட அதன் உறுப்பினர்கள் இணைந்து விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளனர்.

தினமும் கந்த புராணப்படிப்பு, சிறப்பு தொடர் சொற்பொழிவு, பஜனை என்பன இடம்பெறுகின்றன. தமிழ் இனியன் செ.ஸ்ரீநிவாசன் முருகப் பெருமானின் சிறப்புகள் பற்றி ஒவ்வொரு நாளும் பல்வேறு தலைப்புகளில் சொற்பொழிவாற்றி வருகின்றார்.

மேலும், எதிர்வரும் 25ஆம் திகதி மாலை 3 மணியளவில் சூரசம்ஹாரம் விமர்சையாக இடம்பெறவுள்ளது. நேரடி அஞ்சல், கரகாட்டம், பொம்பலாட்டம் என பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

மேலும் நிகழ்வுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்