மேளவாத்தியம் முழங்க கோலாகலமாக கொண்டாடப்பட்ட தீபாவளி

Report Print Gokulan Gokulan in நிகழ்வுகள்
13Shares
13Shares
ibctamil.com

உலகளாவிய ரீதியில் இந்து மக்கள் இன்று தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகின்ற நிலையில் ஹட்டன் வாழ் மக்கள் பண்டிகையை மேளதாள இசை முழங்க மகிழ்ச்சியோடு வரவேற்றுள்ளனர்.

ஹட்டன் வாழ் சர்வ மத தலைவர்கள் மற்றும் பொது மக்கள் அனைவரும் இணைந்து நேற்று நள்ளிரவு 12 மணியளவில் பண்டிகையை வரவேற்கும் சிறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர்.

ஹட்டன் நகர மத்தியில் மேளவாத்தியம் முழங்க, பட்டாசு கொழுத்தி, வான வேடிக்கைகளோடு மங்கள விளக்கேற்றி வரவேற்றனர். மும்மத தலைவர்களும் மூவின மக்களும் தீபாவளியை மகிழ்ச்சியோடு கோலாகலமாக கொண்டாடியுள்ளனர்.

மேலும் நிகழ்வுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்