அட்டாளைச்சேனை தேசிய கல்விக் கல்லூரியின் 25ஆவது ஆண்டு வெள்ளி விழா நிகழ்வு

Report Print V.T.Sahadevarajah in நிகழ்வுகள்
9Shares
9Shares
ibctamil.com

அட்டாளைச்சேனை தேசிய கல்வியியல் கல்லூரியின் 25ஆவது ஆண்டு வெள்ளி விழா நிகழ்வு கல்லூரி மண்டத்தில் இடம்பெற்றுள்ளது.

'மாறுவோம், மாற்றுவோம்' எனும் கருப்பொருளின் கீழ் கல்லூரியின் பீடாதிபதி எம்.ஐ.எம்.நவாஸ் தலைமையில் நேற்று இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது.

குறித்த நிகழ்வில் ஆசிரியர் கல்விக்கான பிரதம ஆணையாளர் கே.எம்.எச். பண்டார, வவுனியா தேசிய கல்விக் கல்லூரியின் பீடாதிபதி கே.சிதம்பரம், மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரியின் பீடாதிபதி எஸ்.ராஜந்திரன், அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சி கலாசாலையின் அதிபர் ஏ.சீ.எம்.சுபையிர், உபபீடாதிபதிகள், இணைப்பாளர்கள், சிரேஸ்ட விரிவுரையாளர்கள், கல்விசாரா ஊழியர்கள், ஓய்வு பெற்ற கல்விசார், கல்விசாரா ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும் நிகழ்வுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்