வெகு சிறப்பாக இடம்பெற்ற கிழக்கு மாகாண விருது வழங்கும் விழா!

Report Print Victor in நிகழ்வுகள்
8Shares
8Shares
ibctamil.com

கிழக்கு மாகாணசபையின் ஏற்பாட்டில் 2016ம் ஆண்டிற்கான கிழக்கு மாகாண உற்பத்தித்திறன் விருது வழங்கும் நிகழ்வு, திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரி மண்டபத்தில் இன்று இடம்பெற்றது.

கிழக்கு மாகாண பிரதம செயலாளார் சரத் அபய குணவர்தன தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித்த போகொல்லாகம, மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஷ்பகுமார திணைக்களங்களது செயலாளார்கள், உள்ளிட்ட பல அரச அதிகாரிகள் பங்கேற்றிருந்தனர்.

குறித்த நிகழ்வில் முதலாவது இடத்தினை நிந்தவூர் ஆதார வைத்தியசாலை பெற்றுக்கொண்டதுடன், 2வது இடத்தினை 6 அரச அலுவலகங்களும் 3வது இடத்தினை 2 அரச அலுவலகங்களும் பெற்றுகொண்டதுடன் 14 அலுவலகங்கள் சான்றிதழ் தகைமைகளையும் பெற்றுக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் நிகழ்வுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்