யாழ். இணுவில் இந்துக்கல்லூரியில் இடம்பெற்ற மாணவர் பாராளுமன்ற கன்னி அமர்வு

Report Print Thamilin Tholan in நிகழ்வுகள்
7Shares
7Shares
ibctamil.com

யாழ். இணுவில் இந்துக்கல்லூரியின் மாணவர் பாராளுமன்ற கன்னி அமர்வு இன்று(16) முற்பகல் 10.00 மணி முதல் கல்லூரி அதிபர் எஸ்.தேவதயாளன் தலைமையில் கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டுள்ளார்.

அத்துடன் பாடசாலையின் வகுப்பறையை அழகுபடுத்துவதற்காக தனது 2017ஆம் ஆண்டுக்கான நிதியொதுக்கீட்டிலிருந்து நிதி வழங்கிய வகுப்பறைகளையும் பார்வையிட்டுள்ளார்.

இதேவேளை, குறித்த நிகழ்வில் மாகாணசபை உறுப்பினருடன், வலிகாமம் கல்வி வலய சமூக விஞ்ஞான உதவிக்கல்விப்பணிப்பாளர், உடுவில் கோட்டக்கல்விப் பணிப்பாளர் மற்றும் அதிபர், ஆசிரியர், மாணவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும் நிகழ்வுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்