யாழில் புகைப்படக் கண்காட்சி ஆரம்பம்! மிகுந்த ஆர்வத்துடன் பார்வையிட்ட வெள்ளைக்காரப் பெண்கள்

Report Print Thamilin Tholan in நிகழ்வுகள்
18Shares
18Shares
ibctamil.com

கொழும்பைத் தலைமையகமாகக் கொண்டு செயற்பட்டு வரும் சமாதானத்தைக் கட்டியெழுப்புதல் மற்றும் மீளிணக்கத்துக்கான ஒன்றியத்தின் இளைஞர் பிரிவின்

ஏற்பாட்டில் "எமது நாடு எமது மக்கள்" எனும் தொனிப் பொருளிலான புகைப்படக் கண்காட்சி யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகியுள்ளது.

குறித்த கண்காட்சிக்கான ஆரம்ப நிகழ்வு இன்று(16) முற்பகல் 10.45 மணியளவில் யாழ். றக்கா வீதியிலுள்ள திருமறைக் கலாமன்றத்தில் இடம்பெற்றுள்ளது.

ஆரம்ப நிகழ்வில் விசேட இசை நிகழ்வு இடம்பெற்றுள்ளதுடன் அதனைத் தொடர்ந்து மும்மதங்களையும் சேர்ந்த பெரியோர்கள் ஆசியுரைகள் நிகழ்த்தினர்.

அதனைத் தொடர்ந்து கடந்த காலத்தில் யுத்தத்தால் உயிரிழந்த தமிழ் மக்களுக்கு மெழுகுதிரி ஏற்றி மெளன அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

இந்த கண்காட்சியில் வடக்கு, கிழக்கு, மலையகம் மற்றும் தென்மாகாணங்களைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட சுமார் 200 வரையான புகைப்படங்கள் இடம் பிடித்துள்ளமை விசேட அம்சமாகும்.

சமூதாய அவலங்கள், தமிழர் பாரம்பரியங்கள், மனித உணர்வு சார்ந்த விடயங்கள், சின்னச் சின்னச் சந்தோசங்கள், இயற்கையின் அழகு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய அரிய புகைப்படங்கள் இந்தக் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.

இந்தக் கண்காட்சியில் இடம்பெற்றுள்ள அனைத்துப் புகைப்படங்களையும் வெளிநாடுகளைச் சேர்ந்த வெள்ளைக்காரப் பெண்கள் சிலர் மிகுந்த ஆர்வத்துடன் பார்வையிட்டுள்ளனர்.

குறித்த கண்காட்சி இன்று மாலை 05 மணி வரை இடம்பெற்றுள்ளதுடன் நாளைய தினமும் இடம்பெறவுள்ளது.

ஆரம்ப நிகழ்வில் சமாதானத்தைக் கட்டியெழுப்புதல் மற்றும் மீளிணக்கத்துக்கான ஒன்றியத்தின் தலைவரும், களனி பல்கலைக்கழகத்தின் முன்னாள் விரிவுரையாளருமான ஜெயந் செனவிரத்ன, யாழ். சின்மயா மிஷன் தலைவர் ஜாக்கிரத சைதன்ய சுவாமிகள், அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமாவின் யாழ், கிளிநொச்சி மாவட்டக் கிளையின் தலைவர் பி.எஸ். எம். சுபியான் மெளலவி மும்மதங்களையும் சேர்ந்த பெரியோர்கள், மாணவ, மாணவிகள், ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

மேலும் நிகழ்வுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்