கொழும்பு - செட்டித்தெரு கதிரேசன் கோவிலில் நேற்று(20) மாலை ஐயப்பன் யாத்திரை பூஜை இடம்பெற்றுள்ளது.
அம்மை அப்பன் யாத்திரை குழுவினரின் ஏற்பாட்டில் கதிரேசன் கோவில் நடத்தும் ஐயப்பன் பூஜை வழிப்பாடுகளில் காலையும் மாலையும் பல இறைபக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த பூஜையில் பக்தி பாடல்கள், பஜனைகள் பாடப்படுவதுடன் எதிர்வரும் ஜனவரி மாதம் 07ஆம் திகதி வரை இவ்வழிப்பாடுகள் நடைபெறும்.
மேலும் ஐயப்பன் அடியார்கள் அனைவரும் இறைவழிப்பாடுகளில் கலந்து கொண்டு ஸ்ரீ சபரி ஐயப்பனின் ஆசீர்வாதத்தையும் அருளையும் பெற்று கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.