மட்டக்களப்பு முத்துமாரியம்மன் ஆலயத்தில் சிறப்பாக நடைபெற்ற கேதார கௌரி விரதம்

Report Print Kumar in நிகழ்வுகள்

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு கொத்துக்குளம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் நேற்று(30) கேதார கௌரி விரதம் சிறப்பாக நடைபெற்றது.

அத்துடன், இறுதித் தினமான இன்று காலை தொடக்கம் அடியார்கள் உபவாசம் இருந்து விரதம் அனுஷ்டித்து காப்பெடுக்கும் நிகழ்வு நடைபெற்று வருகின்றது.

ஆலயத்தின் பிரதம குரு சிவ ஸ்ரீ நித்திய சேக்கிழார் குருக்களின் தலைமையில் இந்த வழிபாடுகள் மற்றும் காப்பு கட்டும் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றது.

மேலும், காலை கும்பம் சொரிதல் உற்சவத்துடன் அடியார்கள் பாராயணம் செய்யும் நிகழ்வு நடைபெற்று விரதம் நிறைவுபெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து மூவாயிரத்திற்கும் மேற்பட்ட அடியார்கள் இந்த காப்பெடுக்கும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

கேதார கௌரி விரதத்தினை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் ஆலயங்களிலே காப்புக் கட்டும் நிகழ்வுகள் சிறப்பான முறையில் நடைபெற்றதுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஆலயங்களிலும் சிறப்பாக நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் நிகழ்வுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments