இராகலை தயானி எழுதிய "அக்கினியாய் வெளியே வா" எனும் கவிதை தொகுப்பு நூல் வெளியீட்டு விழா நேற்று இடம்பெற்றது.
ஓய்வு நிலை உதவி கல்வி பணிப்பாளர் பீ.மரியதாஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வு, இராகலை தமிழ் மாகா வித்தியாலயத்தின் பாரதி மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்த கவிதை நூலானது மலையகம், பெண்ணியம், சமூகப் பிரச்சினைகள், உள்ளிட்ட பல்வேறு கருப்பொருட்களை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டுள்ளது.
மேலும், இந்த நிகழ்வில் மேன்மன்கவி அருணாசுந்தரராசன், இராகலை தமிழ் மாகா வித்தியாலயத்தின் அதிபர் சோ.சற்குணராஜா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.