முருங்கன் ஆத்திக்குழியில் இரண்டு இரவுகளைக் கொண்ட 'என்றிக்கு எம்பரதோர்' வடமோடி நாடக அரங்கேற்றம்!

Report Print Ashik in நிகழ்வுகள்

மாதோட்ட புலவர் அமரர் கீத்தாம்பிள்ளை அவர்களினால் இயற்றப்பட்ட 'என்றிக்கு எம்பரதோர்' வடமோடி நாடக அரங்கேற்றம் இரண்டு இரவுகள் மன்னார் முருங்கன் ஆத்திக்குழி கிராமத்தில் அரங்கேற்றம் செய்யப்படவுள்ளது.

நாளை புதன் கிழமை மற்றும் நாளை மறுதினம் வியாழன் ஆகிய இரு தினங்கள் இரவு 7 மணிக்கு ஆத்திக்குழி புலவர் கீத்தாம்பிள்ளை கலையரங்கில் அரங்கேற்றம் செய்யப்படவுள்ளது.

குறித்த நாடகமானது 1798 ஆம் ஆண்டு எழுதப்பட்ட நிலையில் 1800 ஆம் ஆண்டு முதல் பல தடவைகள் அரங்கேற்றப்பட்டது.

அளவக்கை பங்குத்தந்தை அருட்தந்தை சுரேந்திரன் றெவ்வல் தலைமையில் இடம் பெறவுள்ள குறித்த நாடக நிகழ்விற்கு விருந்தினராக மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் அருட்கலாநிதி கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை, மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை , வடமாகாண பிரதம செயலாளர் அ.பத்திநாதன் மற்றும் முருங்கன் மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை மார்க்கஸ், தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன் உற்பட பல அதிதிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்த நாடகமானது சுமார் 20 வருடங்களின் பின் மீண்டும் முருங்கன் ஆத்திக்குழி கிராமத்தில அரங்கேற்றப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் நிகழ்வுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments