ஓய்ந்தும் ஒளி துலங்கும் ஆசான்கள்

Report Print Akshi in நிகழ்வுகள்
30Shares

புத்தளம் அல்-காசிமி "இஸ்லாமிய சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின்" ஏற்பாட்டில் இடம்பெற்ற "ஓய்ந்தும் ஒளி துலங்கும் ஆசான்கள் கௌரவிப்பு விழாவும் மாணவர் பரிசளிப்பு விழாவும்" இன்று மாலை அல் - காசிமி ரிஷாட் பதியுதீன் மகா வித்தியாலய விளையாட்டுத்திடலில் இடம்பெற்றுள்ளது.

இந்த நிகழ்வில் தாராபுரம் மண்ணிண் மைந்தரும் மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனுக்கு நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நவவி, புத்தளம் மாவட்ட மக்கள் காங்கிரஸ் அமைப்பாளர் சப்ரி, மாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன், யூசுப் கே மரைக்கார் மற்றும் பல அதிதிகள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் நிகழ்வுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments