“நீந்திக்கடந்த நெருப்பாறு” முழுநீள நாவல் கிளிநொச்சியில் வெளியீடு

Report Print Arivakam in நிகழ்வுகள்
“நீந்திக்கடந்த நெருப்பாறு” முழுநீள நாவல் கிளிநொச்சியில் வெளியீடு

ஈழத்தின் மூத்த எழுத்தாளர் நா.யோகேந்திரநாதனின் “நீந்திக்கடந்த நெருப்பாறு” எனும் நூல் ஒன்று வெளியிடப்பட உள்ளது.

இந்த நிகழ்வு எதிர்வரும் 18.06.2016 சனிக்கிழமை கரைச்சி பிரதேசசபை மண்டபத்தில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வினை, இறுதிப் போரின்போது களத்திலே நின்று மக்களுக்குப் பணியாற்றிய மருத்துவர் வைத்தியக் கலாநிதி த.சத்தியமூர்த்தி (பணிப்பாளர் - யாழ் போதனா வைத்தியசாலை), தலைமை தாங்க உள்ளார்.

முதன்மை விருந்தினராக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனும், கௌரவ ரீதியாக கிளிநொச்சிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனும், ,சிறப்பு விருந்தினராக வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சர் த.குருகுலராஜாவும், கலந்து சிறப்பிக்க உள்ளதுடன் நூல் அறிமுக உரையினை நூலாசிரியர் திரு.ந.யோகேந்திரநாதனும், ஆய்வுரைகளை ஆசிரியர்களான திரு.சு.லோகேஸ்வரன் (கிளி/ திருவையாறு மகாவித்தியாலயம்), திரு.அ.சத்தியானந்தன் (கிளி/ மத்திய மகாவித்தியாலயம் தேசிய பாடசாலை) ஆகியோரும் நிகழ்த்த உள்ளனர்.

இந்த நூலானது எமது மண்ணில் இறுதிப்போரில் இடம் பெற்ற பெரும் போரையும், இனப்படுகொலையையும், அந்தப் போருக்குள்ளான மக்களின் வாழ்வையும் சித்தரிக்கும் இந்த நூல் கிளிநொச்சியிலிருந்து வெளிவரும் முதல் முழுநீள நாவலாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் நிகழ்வுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments