வவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற நவராத்திரி விழா

Report Print Thileepan Thileepan in நிகழ்வுகள்

இந்து கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் வவுனியாவில் நவராத்திரி விழா சிறப்பாக நடைபெற்றுள்ளது.

வவுனியா குடியிருப்பு பிரதேச கலாசார மண்டபத்தில் இன்று வவுனியா மாவட்ட செயலகத்தின் இணை ஏற்பாட்டில் நவராத்திரி விழா இடம்பெற்றுள்ளது.

நவராத்திரி விழா சக்தி பூஜையுடன் ஆரம்பமானதுடன், இதன்போது சகலகலாவல்லி மாலை பாடப்பட்டது.

அத்துடன் அறநெறி பாடசாலை மாணவர்களின் கலை, கலாசார நிகழ்வுகள் நடைபெற்றன.

வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தி. திரேஸ்குமாரின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் உதவி மாவட்ட செயலாளர் கமலதாசன், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், அறநெறி பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பாலர் பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் நிகழ்வுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்