தமிழர்களிற்கு பிரான்சில் இடம் பெற்ற பட்டமளிப்பு விழா

Report Print Nesan Nesan in நிகழ்வுகள்

பாரிஸ் தமிழ் சோலை இளங்கலை தமிழ் பட்டமளிப்பு விழா தமிழ் சோலை தலைமை செயலகத்தின் ஏற்பாட்டில் நேற்று மாலை நடைபெற்றுள்ளது.

இந்த நிகழ்வில் இலங்கை கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னால் கலை, கலாச்சார பீடாதிபதி பாலசிங்கம் சுகுமார் மற்றும் பேராசிரியர் ரசல் மெஅலே ருனோ உட்பட மாநகரசபை உறுப்பினர்கள், தமிழ் சோலை தலைமை செயலக செயற்பாட்டாளர்கள், நிர்வாகிகள், தமிழ் சங்க உறுப்பினர்கள் உட்பட பெருந்திரளானோர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது தமிழர் கலாச்சாரத்தினை பிரதிபலிக்கும் கலை, கலாச்சார வரவேற்பு நிகழ்வுகள் நடத்தப்பட்டுள்ளன.

அதனை தொடர்ந்து இளங்கலை தமிழ் பட்டப்படிப்பினை முடித்த 29 பட்டதாரிகளுக்கான பட்டமளிப்பு நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

மேலும் நிகழ்வுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்