நாடளாவிய ரீதியில் சிறப்பாக இடம்பெற்றுள்ள நோன்பு பெருநாள் தொழுகை

Report Print Gokulan Gokulan in நிகழ்வுகள்
43Shares
43Shares
ibctamil.com

மட்டக்களப்பில்...

நோன்பு பெருநாளை முன்னிட்டு ஓட்டமாவடியில் திறந்த வெளியிலான பெருநாள் தொழுகையும், கொத்பா பேருரையும் இடம்பெற்றுள்ளது.

குறித்த திறந்த வெளியிலான பெருநாள் தொழுகை மற்றும் கொத்பா பேருரை என்பன ஓட்டமாவடி தேசிய பாடசாலை மைதானத்தில் இன்று காலை நடத்தப்பட்டுள்ளன.

இதில் ஓட்டமாவடி, வாழைச்சேனை, மீராவோடை, மாவடிச்சேனை, செம்மண்ணோடை, பிறைந்துரைச்சேனை போன்ற கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டிருந்தனர்.

செய்திகள் - நவோஜ்

திருகோணமலையில்...

கந்தளாய் மற்றும் முள்ளிப்பொத்தானை போன்ற பகுதிகளில் ஈதுல் பித்ர் நோன்பு பெருநாள் இன்று காலை விமர்சையாக நடைபெற்றுள்ளது.

இதன்போது கந்தளாய் பேராறு பொது விளையாட்டு மைதானத்திலும், முள்ளிப்பொத்தானை சிராஜ் நகர் விளையாட்டு மைதானத்திலும் தொழுகைகள் நடத்தப்பட்டுள்ளன.

இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.

செய்திகள் - முபாரக்

யாழ்ப்பாணத்தில்...

ஈதுல் பித்ர் எனும் நோன்பு பெருநாள் தொழுகை யாழ்ப்பாணம் ஜின்னா மைதானத்தில் இன்று சிறப்பாக நடைபெற்றுள்ளது.

யாழ். கிளிநொச்சி உலமா சபை மற்றும் அனைத்து பள்ளிவாசல் நிர்வாக சபையினரும் இணைந்து ஏற்பாடு செய்த முஸ்லிம் வட்டார மக்களுக்கான இந்த பெருநாள் தொழுகை ஏற்பாடுகள் மௌலவி அப்துல் அஸீஸ் (காசிமி) தலைமையில் நடத்தப்பட்டுள்ளது.

இதேவேளை வழமை போன்று பெண்களுக்கான தொழுகையும் அதே இடத்தில் உள்ள ஒஸ்மானியா கல்லூரி உள்ளக வளாகத்தில் நடைபெற்றது.

செய்திகள் - சுமி

மன்னாரில்...

மன்னார் மாவட்டத்திலும் இன்று நோன்பு தொழுகையும், பிரார்த்தனையும் சிறப்பான முறையில் இடம்பெற்றுள்ளது.

மன்னார் மூர்விதியில் உள்ள மூர்வீதி ஜும்மா பள்ளிவாசலில் இடம்பெற்ற தொழுகையில் நூற்றுக்கணக்கான முஸ்லிம் மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.

செய்திகள் - ஆஸிக்

கிளிநொச்சியில்...

கிளிநொச்சியில் இஸ்லாமியர்கள் நோன்பு பெருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.

அந்த வகையில் இன்று காலை கிளிநொச்சியில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் விசேட வழிபாடுகள் இடம்பெற்றுள்ளன.

செய்திகள் - யது

ஹட்டனில்...

ஹட்டன் நகரின் பிரதான ஜூம்மா பள்ளிவாசலில் மௌலவி முகமட் ஷாஜகான் தலைமையில் விசேட ரமழான் தொழுகையும், பிராத்தனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதில் பெருந்திரளான முஸ்லிம் மக்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

செய்திகள் - திருமால்

கொழும்பில்...

ஹிஜ்ரி 1439 ஷெவ்வால் மாதத்தின் தலைபிறை தென்பட்டதன் அடிப்படையில் இன்று இலங்கை வாழ் முஸ்லிம்களினால் புனித ரமழான் பெருநாள் கொண்டாடப்படுகின்றது.

அந்த வகையில் இன்று கொழும்பிலும் நோன்பு பெருநாள் கொண்டாடப்படுகின்றது.

காலி முகத்திடலில் இன்று காலை 8 மணிக்கு கூடிய முஸ்லிம்கள் தொழுகை செய்ததை காணக்கூடியதாக உள்ளது.

செய்திகள் - ஆகாஷ்

மேலும் நிகழ்வுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்