மட்டக்களப்பில் சிறப்பிக்கப்பட்ட தமிழ், சிங்கள புத்தாண்டு விழா

Report Print Kumar in நிகழ்வுகள்

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் இந்த ஆண்டிற்கான தமிழ், சிங்கள புத்தாண்டு விழா நேற்று பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் பிரிவின் கச்சக்கொடி சுவாமி மலை விளையாட்டு மைதானத்தில் விழாவிற்கான நிகழ்வுகள் மிகவும் கோலாகலமாக நடத்தப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வுகளை நடத்துவதற்கு பிரதேச செயலகங்கள், இலங்கை இராணுவம், கடற்படை, வான்படை, பொலிஸ் ஆகியோரின் ஒத்துழைப்புக்கள் வழங்கப்பட்டிருந்தன.

தேசிய ஒற்றுமை மற்றும் சமய நல்லிணக்கத்தை மேம்படுத்தும் மற்றும் அரசாங்கத்தின் அபிப்பிராயங்களை வெற்றி கொள்ளச் செய்யும் நோக்கங்களுடன் இந்த விளையாட்டு விழா மாவட்ட செயலாளர் மா.உதயகுமார் தலைமையில் நடத்தப்பட்டுள்ளது.

மேலும் நிகழ்வுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers