கூடுதலாக 300 மில்லியன் ஃபைசர் தடுப்பு மருந்துகளை வாங்கும் ஐரோப்பா!

Report Print Ragavan Ragavan in ஐரோப்பா
71Shares

ஃபைசர் - பயோஎன்டெக் நிறுவனத்திடமிடமிருந்து மொத்தம் 600 மில்லியன் டோஸ்களை வாங்க ஐரோப்பா ஒப்பந்தம் செய்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம் ஃபைசர்-பயோஎன்டெக்கிலிருந்து அதன் ஆர்டரை இரட்டிப்பாக்கி, கூடுதலாக 300 மில்லியன் கொரோனா தடுப்பு மருந்து டோஸ்களை வாங்குகிறது என்று ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் இன்று அறிவித்துள்ளார்.

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஐரோப்பியர்கள் போதுமான அளவு பாதுகாப்பான மற்றும் பயனுள்ள கோவிட் -19 தடுப்பூசிகளைக் கொண்டிருப்பதை நாங்கள் உறுதிசெய்கிறோம்," என்று பதிவிட்டுள்ளார்.

ஐரோப்பா ஃபைசர் - பயோஎன்டெக் தயாரித்த கொரோனா தடுப்பூசியை தான் முதன்முதலில் அந்நாடுகளில் பயன்படுத்த அங்கீகரித்தது. முதல் ஆர்டரின்போதே 300 மில்லியன் டோஸ்களுக்கு ஒப்பந்தம் போட்ட ஐரோப்பா, இப்போது அந்த ஆர்டரை இரட்டிப்பாக்கியுள்ளது.

புதிய ஆர்டரின் முதல் 75 மில்லியன் டோஸ்கள் 2021-ஆம் ஆண்டின் முதல் பாதியில் இறக்குமதி செய்யப்படும், மீதமுள்ளவை ஆண்டின் மூன்றாவது மற்றும் நான்காம் காலாண்டுகளில் பெறப்படும்.

மேலும் ஐரோப்பா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்