ஐரோப்பாவில் ஒவ்வொரு நொடிக்கும் ஒருவர் பலி! என்ன காரணம்? உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி தகவல்

Report Print Santhan in ஐரோப்பா
81Shares

ஐரோப்பாவில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஒவ்வொரு நொடிக்கு ஒருவர் கொரோனாவால் பலியாகியிருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவின் இரண்டாம் கடம் நிலை தீவிரமாகி வருகிறது. குறிப்பாக ஜேர்மனி, ஸ்வீடன், பிரான்ஸ், பிரித்தானியா போன்ற நாடுகளில் கொரோனா பரவல் தீவிரமாகி வருகிறது.

இந்நிலையில், இது குறித்து உலக சுகாதார அமைப்பு கூறுகையில், ஐரோப்பிய நாடுகளில் கடந்த வாரத்தில் 10 லட்சத்துக்கும் அதிகமான நபர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஐரோப்பாவில் ஒவ்வொரு 17 நொடிகளுக்கு ஒருவர் கொரோனா வைரஸால் பலியாகியுள்ளதாக தெரிவித்துள்ளது.

உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 5 கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 13 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஐரோப்பா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்