பின்லாந்தில் 'வாரத்தில் 4 நாட்கள் மட்டும் வேலை' என்று அறிவித்ததாக வெளிவந்த செய்தி: உண்மை?

Report Print Abisha in ஐரோப்பா

பின்லாந்தில் வாரத்தில் 4 நாட்கள் தான் வேலை என்றும், 3 நாட்கள் விடுமுறை என்றும் அறிவிக்கப்பட்டதாக வெளிவந்த செய்தியை அந்நாட்டு அரசு மறுத்துள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பின்லாந்தில், 34 வயதான பிரதமர் சன்னா மரின் பொறுப்பேற்ற பின், அவரை உலக நாடுகள் அனைத்து உற்று நோக்க துவங்கின.

இந்நிலையில், சில தினங்களாக பின்லாந்து நாட்டில் வாரத்தில் 4 நாட்கள் மட்டும் வேலை மற்றும் 3 நாட்கள் விடுமுறை, நாள் ஒன்றிற்கு 6 மணி நேரம் மட்டும் வேலையை பிரதமர் சன்னா அறிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவித்தன.

ஆனால், உண்மையில்லை என்று அந்நாட்டு அரசு இதை மறுப்பு தெரிவித்துள்ளது. 2019ஆம் ஆண்டில் போக்குவரத்து அமைச்சராக இருந்த சன்னா மரின் அரசின் குழு விவாதத்தில் இந்த யோசனையை முன்வைத்துள்ளார், ஆனால் அப்போதைய பிரதமர் இதை நடைமுறைபடுத்த எந்த நடவடிக்கையையும் ஏற்றுக்கொள்ளவில்லை.

இந்த தகவலை ஜனவரி 2ஆம் திகதி பெல்ஜியம் நாட்டில் உள்ள இணையதளம் கட்டுரையில் வெளியிட்டது.

அந்த தகவலின் அடிப்படை என்னவென்றால், “பின்னிஷ் பிரதமர் தனது முந்தைய கருத்துக்களை செயல்படுத்த முனைகிறாரா என்று நாங்கள் பார்க்க விரும்பினோம். ஆனால் இந்த நேரத்தில் அந்த விவகாரம் குறித்த உண்மையான தகவல்களை சரிபார்க்க தவறிவிட்டோம்” என அந்த செய்தியை முதலில் பதிவிட்டவர் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த செய்தியை தவறுதலாக அமெரிக்கா, அவுஸ்திரேலியா, இந்தியா, ரஷ்யா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் வெளியிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஐரோப்பா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்