ஐ.எஸ்-ல் 5000 ஐரோப்பியர்கள்... அவர்களின் புது தந்திரம் இது தான்: ஐரோப்பிய ஆணையம் திடுக் தகவல்

Report Print Basu in ஐரோப்பா

2011-2016 கால கட்டத்தில் மொத்தம் 42,000 வெளிநாட்டவர்கள் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் சேர்ந்ததாகவும், அதில், 5000 பேர் ஐரோப்பியர்கள் என ஐரோப்பிய ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது.

ஈராக் மற்றும் சிரியாவில் தன் பகுதியை இழந்த ஐ.எஸ் அமைப்பினர், தனது அமைப்பில் சேர்ந்துள்ள வெளிநாட்டவரை சொந்த நாட்டிற்கே திருப்பி அனுப்பி வைப்பதை புது தந்திரமாக மேற்கொண்டு வருகின்றனர் என ஸ்பெயின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், ஐ.எஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் ஐரோப்பியாவிற்கு திரும்புவதற்கு உதவிய குற்றத்திற்காக சிரிய நபரை ஸ்பெயின் பொலிசார் கைது செய்துள்ளனர்.

சம்பவம் குறித்து ஸ்பெயின் பொலிசார் கூறியதாவது, ஐ.எஸ் அமைப்பின் நிதிசார் கட்டமைப்புடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் அடிப்படையில் சிரிய நபர் ஜாமீன் இல்லாமல் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் கைது செய்யப்பட்ட சிரிய நபர், ஐ.எஸ் ஆதரவாளர்களிடமிருந்து பணம் சேகரித்து அதை சிரியாவில் உள்ள ஐ.எஸ் அமைப்பிற்கு அனுப்பிய குற்றத்திற்காகவும் கைது செய்யப்பட்டுள்ளார். ஐரோப்பிய அதிகாரிகளுடன் கூட்டாக இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஐரோப்பா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்