மூவாயிரம் ஆண்டுகளாக தழுவியபடி இருக்கும் கணவன் மனைவி: நெஞ்சை நெகிழ வைக்கும் உக்ரைன் காதல்

Report Print Trinity in ஐரோப்பா

தனது கணவனின் மேல் உள்ள பிரியத்தால் அவன் இறந்த பின்னும் அவனோடு வாழ முடிவெடுத்த மனைவி தான் உயிரோடு இருக்கும்போதே கணவரின் உடலோடு தன்னை புதைத்து கொண்ட உண்மை நிகழ்வொன்று உக்ரைனில் நடந்திருக்கிறது.

தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களுக்கு Ternopil மேற்கு Ukranian நகரம் அருகில் இரண்டு உடல்கள் சமாதியான நிலையில் வெறும் எலும்பு கூடுகளாக கிடைத்துள்ளன.

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தையதான அந்த எலும்புக்கூடுகள் இருந்த நிலை ஆராய்ச்சியாளர்களை அதிசயப்பட வைத்தது.

ஆமாம். கணவன் உடல் அருகே மிகுந்த காதலோடு அவனது கழுத்தின் பின்புற கைகள் நுழைத்து தோளை அணைத்தபடி அவனது நெற்றியோடு தனது நெற்றியை வைத்து நேர்பார்வை பார்த்தபடி அந்த பெண் இறந்து போயிருப்பதாக எலும்புகளின் படுத்திருந்த வடிவத்தை வைத்து தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

இயற்க்கையாகவே இறந்து போன உடல் இப்படிப்பட்ட நிலையில் இறந்திருக்க முடியாது என்று இதனை ஆராய்ந்த தொல்லியல் மருத்துவர்கள் கூறுகின்றனர். வலுக்கட்டாயமாக தன்னை கணவன் உடலோடு புதைத்து கொள்ள விரும்பும் ஒரு பெண்ணால் மட்டுமே உயிரோடு இருக்கும்போது இப்படி தன் கணவனோடு இந்த நிலையில் படுத்திருக்க முடியும் என்றும் அதன்பின்னரே அவர் இறந்திருக்கலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

பண்டைய உக்ரைன் கலாச்சாரம் மிக மென்மையானது என்றும் அந்த காலத்தில் வாழ்ந்த மனிதர்களின் கலாச்சாரம் Vysotskaya அல்லது Wysocko என்று அழைக்கப்பட்டது என்றும் இவர்கள் கூறுகிறார்கள்.

இந்த எலும்புக்கூடுகளை ஆராய்ச்சி செய்த உக்ரைன் தொல்பொருளியல் நிறுவனம் மீட்பு தொல்பொருள் சேவை Transcarpathian கிளை இயக்குனர் டாக்டர் Bandrivsky கூறுகையில் இந்த எலும்புகளின் இருப்பை பார்க்கும்போது ஏற்கனவே இறந்த கணவனை பிரிய மனமில்லாத மனைவி அல்லது கணவனை தனியே வானுலகத்துக்கு அனுப்ப விரும்பாத மனைவி தனது சுய விருப்பத்துடன் இப்படிப்பட்ட நிலையில் இறந்திருக்கலாம் என்று கூறினார்.

இறக்கும் முன்பு வலியில்லாமல் இறப்பதற்காக விஷம் குடித்து அந்த பெண் உயிரோடு சமாதி ஆகியிருக்கலாம் என்று தொல்லியில் நிபுணர்கள் தெரிவித்தனர்.

அவர்கள் காட்டிய புகைப்படத்தை பார்க்கும்போது இது சாத்தியம் என்றுதான் தோன்றுகிறது. மேலும் பண்டைய கால உக்ரைன் மக்கள் காதல் என்பதை மிகுந்த பொறுப்புணர்வோடு அணுகினார்கள் என்றும் வரலாறு கூறுகிறது.

எத்தனையோ புகைப்படங்களில் வெளிப்படுகின்ற காதல்கள் நேர்மையற்று நீர்த்து போய் விடுகின்ற இந்த சமகாலத்திய காதல்களோடு ஒப்பிடுகையில் கணவனை அணைத்தபடி பத்திரமாக அவனது அருகாமையில் இறந்து போயிருக்கும் இந்த பெண்ணும் அந்த ஆணும் காலங்கள் தாண்டியும் இன்னும் காதலித்தபடியேதான் இருக்கிறார்கள் என்றுதான் சொல்ல தோன்றுகிறது.

மேலும் ஐரோப்பா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...