மதிய உணவிற்கு மட்டும் 526 யூரோவை வசூலித்த உணவகம்: புகார் தெரிவித்த பிரித்தானிய பெண்

Report Print Kabilan in ஐரோப்பா
147Shares

இத்தாலிக்கு சுற்றுலா சென்ற பிரித்தானியா குடும்பத்தினர் மதிய உணவிற்கு அதிக கட்டணத்தொகை விதித்ததாக ஒரு உணவகத்தின் மீது புகார் தெரிவித்துள்ளனர்.

வெனிஸ் நகரத்துக்கு அதிகமான சுற்றுலா பயணிகள் செல்வது வழக்கம். இந்நிலையில் பிரித்தானியாவை சேர்ந்த Luke Tang, என்பவர் தனது பெற்றோருடன் அங்கு சுற்றுலா சென்றுள்ளார்.

அங்கு உள்ள ஒரு உணவகத்தில் இவர்கள் மதிய உணவு உட்கொள்ள சென்றுள்ளனர்.

ஆனால், அவர்கள் கேட்ட உணவிற்கு பதிலாக வேறு உணவை அளித்ததோடு, மதிய உணவிற்கு மட்டும் 526 யூரோவை <>வசூலித்துள்ளனர்.

இதனால், அதிர்ச்சி அடைந்த பிரித்தானிய குடும்பத்தினர், வாக்குவாதம் எதிலும் ஈடுபடாமல் கட்டணத்தை செலுத்திவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர்.

பின்னர், Luke Tang வெனிஸ் நகர மேயருக்கு, உணவகத்தின் மீது புகார் கடிதம் ஒன்றினை எழுத்தினார்.

அதில் அவர் கூறுகையில், நான் எனது பெற்றோருடன் Trattoria Casanova உணவகத்திற்கு மதிய உணவிற்காக சென்றேன். அங்கு நங்கள் கேட்ட உணவிற்கு பதிலாக, வறுத்த மீன், கடல் நண்டு மற்றும் சிற்பிகள் ஆகியவற்றை பணியாளர்கள் வழங்கினர்.

மேலும், அதற்கு கட்டணமாக 526 யூரோக்கள் எனும் மிகப் பெரிய கட்டணத்தை ரசீதாக கொடுத்தனர். அதை பார்த்து நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம். எனது தந்தையின் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் உணவக நிர்வாகிகளுடன் நான் வாக்குவாதத்தில் ஈடுபட விரும்பவில்லை.

எனவே, அந்த கட்டணத்தை செலுத்தி விட்டு வந்துவிட்டேன். ஆனால், இது வெனிஸ் நகரின் புகழை கெடுக்கும் செயலாகும். நான் உங்கள் நகரிடம் இதனை எதிர்பார்க்கவில்லை. சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் புகழ்பெற்ற வெனிஸ் நகருக்கு இந்த உணவகத்தின் செயலால் மிகுந்த அவமானம் ஏற்படும்.

எனவே, உணவகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மேயருக்கு எழுதிய கடித்ததில் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், ஒரு பத்திரிக்கைக்கு அவர் அளித்த பேட்டியில், நான் அந்த உணவகத்தினை குறித்த தகவல்களை சேகரித்தபோது, அவர்கள் எங்கள் மீது தான் இவ்வளவு அதிக கட்டணத்தினை வசூலித்துள்ளனர் என்பது தெரிய வந்தது.

மேலும், ஜப்பானிய மற்றும் கொரிய சுற்றுலா பயணிகள் பல பேர் இதே போன்ற குற்றச்சாட்டுகளை அந்த உணவகத்தின் மீது சுமத்தியுள்ளனர். அந்த உணவகத்தின் இலக்கே ஆசிய வாடிக்கையாளர்கள் தான்.

ஏனெனில் அவர்கள் மொழி, புகார் தெரிவிக்க ஒரு தடையாக இருப்பதே ஆகும் என Luke Tang தெரிவித்துள்ளார்.

Trattoria Casanova உணவத்தின் மீது ஒன்லைனில் 56 சதவீதம் பேர் மோசமான உணவகம் என கருத்து தெரிவித்துள்ளனர். வெறும் 18 சதவீதம் பேரே நன்று என கருத்தினை பதிவிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஐரோப்பா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்