ஒரு பீட்சா விலை 77 லட்சம்... காரணம் என்ன?

Report Print Kabilan in ஐரோப்பா
189Shares
189Shares
ibctamil.com

இத்தாலி நாட்டில் ’லூயிஸ் 13’ என்னும் பீட்சா 77 லட்சத்திற்கு விற்கப்படுகிறது.

இத்தாலியில் பிரபலமான சமையல் கலைஞர்கள் இணைந்து உலகிலேயே அதிக விலையுயர்ந்த பீட்சா ஒன்றை தயாரித்துள்ளனர். இந்த பீட்சாவுடன் விலையுயர்ந்த மதுபானமான ரெமி மார்ட்டின் பரிமாறப்படுகிறது.

இதனால் இதன் விலை 77 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சுமார் 72 மணிநேரம் வைத்து இந்த பீட்சா பதப்படுத்தப்படும் என அதனை தயாரித்த சமையல் குழுவில் ஒருவரான ரெனோடோ வயோலா தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த பீட்சாவை தயாரிக்க தேவையான அனைத்து வாசனை மற்றும் உணவு பொருட்களும் பிரான்ஸ் நாட்டில் இருந்து பிரத்யேகமாக இறக்குமதி செய்யப்படுகிறதாம்.

சமீபத்தில் தனியார் உணவு ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று வெளியிட்ட உணவுப் பட்டியலில் ‘லூயிஸ் 13’ பீட்சா தான் உலகின் விலையுயர்ந்த பீட்சா என்னும் பெருமையை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஐரோப்பா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்