பிரெக்சிற்: (பிரித்தானியா) அவசரமான ஒப்பந்தத்துக்கு கோரிக்கை

Report Print Thayalan Thayalan in ஐரோப்பா
பிரெக்சிற்: (பிரித்தானியா) அவசரமான ஒப்பந்தத்துக்கு கோரிக்கை
184Shares
184Shares
ibctamil.com

அவசரமான பிரெக்சிற் ஒப்பந்தமொன்றை பிரித்தானியாவின் 5 வணிகக் குழுவினர் கோரியுள்ளனர்.

பிரித்தானியாவின் பிரெக்சிற்றுக்குப் பொறுப்பான அமைச்சர் டேவிட் டேவிஸுக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே, அவர்கள் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘பிரெக்சிற் விவகாரம் தொடர்பில் அவசரமாக ஒப்பந்தமொன்றை முன்வைக்க வேண்டும் என்று நாம் கோருகின்றோம். ஏனெனில், உடனடியாக ஒப்பந்தமொன்றை முன்வைக்காவிடின் நாம் பாதிப்புகளை எதிர்நோக்க நேரிடும்.

பிரித்தானியாவில் முதலீடுகளைச் செய்வதில் பாதிப்பு ஏற்படும் என்பதுடன், வேலைவாய்ப்புகளை இழக்கும் சூழ்நிலை ஏற்படும்’ எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பிரெக்சிற் விவகாரம் தொடர்பில் உண்மையானதும் உறுதியானதுமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அரசாங்கத் தரப்பு பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.

மேலும் ஐரோப்பா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்