ஐரோப்பாவில் ஊடுருவியிருக்கும் 173 தற்கொலைப்படை தீவிரவாதிகள்: எச்சரிக்கும் இண்டர்போல்

Report Print Arbin Arbin in ஐரோப்பா
133Shares
133Shares
ibctamil.com

ஐரோப்பிய நாடுகளில் தாக்குதல் நடத்த தயாராக உள்ள 173 ஐ.எஸ். தற்கொலைப்படை தீவிரவாதிகளின் பட்டியலை இண்டர்போல் அமைப்பு வெளியிட்டுள்ளனர்.

பிரான்ஸ், ஜேர்மனி, பெல்ஜியம், பிரித்தானியா ஆகிய நாடுகளில் கடந்த சில மாதங்களாக தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இதனிடையே ஐ.எஸ் தீவிரவாதிகளின் கோட்டையாக கருதப்பட்ட மொசூல் நகரம் அமெரிக்க கூட்டுப்படைகளிடம் வீழ்ந்த நிலையில், ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு கடும் பின்னடைவை சந்தித்து வருகிறது.

மட்டுமின்றி அமைப்பின் தலைவர் அல் பாக்தாதி கொல்லப்பட்டதாக வெளியான தகவலும் அந்த அமைப்பை கடும் நெருக்கடிக்கு தள்ளியுள்ளது.

இந்த நிலையில் ஐரோப்பிய நாடுகளை பழிவாங்கும் நோக்குடன் 173 தற்கொலைப்படை பயங்கரவாதிகளை ஐ.எஸ் அமைப்பு களமிறக்கியுள்ளதாகவும் அவர்கள் ஐரோப்பிய நாடுகளில் ஊடுருவியுள்ளதாகவும் சர்வதேச அமைப்பான இண்டர்போல் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சர்வதேச அளவில் எவ்வித சிக்கலுமின்றி பயணப்பட அவர்களால் முடியும் என்ற நிலையில், கடுமையான தாக்குதலையும் அவர்கள் முன்னெடுக்க கூடும் என இண்டர்போல் எச்சரிக்கை செய்துள்ளது.

இந்தாண்டு தொடக்கத்திலிருந்து ஜூன் 30-ம் திகதிவரை ஐரோப்பிய நாடுகளில் சுமார் 24 தீவிரவாத தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன. இத்தாக்குதல்களில் மட்டும் சுமார் 105 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர், 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

ஜூன் 22-ம் திகதி இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் நடத்தப்பட்ட தாக்குதலில் 22 பேர் உயிரிழந்தனர், மேலும் 119 பேர் காயமடைந்தனர்.

இந்நிலையில், ஐரோப்பிய நாடுகளில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த ஐ.எஸ். அமைப்பு திட்டமிட்டிருப்பதாக சர்வதேச அமைப்பான இண்டர்போல் வெளியிட்டுள்ள எச்சரிக்கை அறிக்கை முக்கியத்துவம் பெறுகின்றது.

மேலும் ஐரோப்பா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்