பிரித்தானியா, ஐரோப்பிய நாடுகளுக்கு மாட்டிறைச்சி என்று ஏமாற்றி குதிரை இறைச்சி விற்ற மோசடி மன்னன் கைது

Report Print Basu in ஐரோப்பா
222Shares
222Shares
ibctamil.com

பிரான்ஸ், பிரித்தானியா என ஐரோப்பிய நாடுகளுக்கு மாட்டிறைச்சி என்று ஏமாற்றி குதிரை இறைச்சி விற்ற இறைச்சி வியாபாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

ஐரோப்பாவின் மாபெரும் இறைச்சி ஊழல் தொடர்பாக விசாரணை செய்த இன்டர்போல் அதிகாரிகள், நெதர்லாந்தை சேர்ந்த 67 வயது வியாபாரி ஒருவரை கைது செய்துள்ளனர்.

மாபெரும் இறைச்சி ஊழல் தொடர்பாக ஸ்பெயினில் 65 பேர் கைது செய்யப்பட்டனர். அதுமட்டுமின்றி பிரான்ஸ், பிரித்தானியா, இத்தாலி, சுவிஸ். போர்ச்சுகல், ருமேனியா ஆகிய நாடுகளில் சோதனை நடத்தப்பட்டு பல வங்கி கணக்குகள் முடக்கப்பட்டது.

இதுதொடர்பாக அதிகாரிகள் மேற்கொண்டு வந்த விசாரணையில் ஸ்பெயினில் கைது செய்யப்பட்டவர்களுக்கு தலைவராக இந்த இறைச்சி மோசடியை நடத்தி வந்த தென் நெதர்லாந்தில் Breda நகரை சேர்ந்த Jan F. என்ற இறைச்சி வியாபாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

Jan F. ஏற்கனவே இறைச்சி மோசடி தொடர்பாக கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலையானவர். இந்த மோசடியை செய்து கோடிக்கணக்கான யூரோக்கள் சம்பாதித்துள்ளார்.

நெதர்லாந்து மட்டுமல்ல, பிரான்ஸ், பிரித்தானியா ஆகிய பிற ஐரோப்பிய நாடுகளுக்கும் குதிரை இறைச்சி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. தென் அமெரிக்காவில் இருந்து குறைந்த விலையில் குதிரை இறைச்சி வாங்கி, அதை மாட்டிறைச்சி என்று சொல்லி அதிக விலைக்கு விற்கப்பட்டுள்ளது.

மேலும் ஐரோப்பா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments