சூழலை பாதுகாக்க முன்னுதாரணமாக களமிறங்கும் பிளிப்கார்ட்

Report Print Givitharan Givitharan in சூழல்
27Shares

இன்று உலகளவில் பொலித்தீன், பிளாஸ்டிக் பாவனையானது வெகுவாக அதிகரித்துள்ள நிலையில் அவற்றினால் சூழலுக்கு ஏற்படக்கூடிய விளைவினை மக்கள் உணரத் தொடங்கியுள்ளனர்.

இதனால் சில நாடுகளில் பொலித்தீன், பிளாஸ்டிக் பாவனைக்கான தடை அமுல்ப்படுத்தப்பட்டு வருகின்றது.

இதேபோன்று முன்னணி மின் வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட்டும் பிளாஸ்டிக், பொலித்தீன்களை பயன்படுத்துவதை நிறுத்தவுள்ளது.

இந்நிறுவனம் பொருட்களை டெலிவரி செய்யும்போது அவற்றினை பிளாஸ்டிக், பொலித்தீன்களை உபயோகித்தே பொதிசெய்கின்றது.

எனினும் 2021 ஆம் ஆண்டிலிருந்து 100 சதவீதம் மீள்சுழற்சிக்கு உட்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன்களை பயன்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.

இதேவேளை கடந்த ஆகஸ்ட் முதலாம் திகதி வரை பிளாஸ்டிக் பாவனையை 25 சதவீதத்தினால் குறைத்துள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் சூழல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்