ஓஸ்கார் நாயகன் டிகாப்ரியோவின் ஆவணப்படம்! கண்டிப்பாக பாருங்கள்

Report Print Aravinth in சூழல்

ஐ.நா-வின் அமைதி தூதரான லியானார்டோ டிகாப்ரியோ புவி வெப்பமடைதல் குறித்து ஒரு ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த ஆவணப் படத்தினை தானே தயாரித்து நடித்துள்ளார்.

இந்நிலையில் இந்த ஆவணப்படத்தை ஒரு வாரத்துக்கு நேஷனல் ஜியோகிராபிக், யூடியூப் போன்ற வீடியோ தளங்களில் இலவசமாக வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது, வரவிருக்கும் அமெரிக்க தேர்தலில் புவி வெப்பமடைதல் பிரச்சனைக்கு யார் தீர்வு காண விரும்புகிறார்களோ அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்பதால் தான் இப்படத்தை வெளியிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இவர் கடந்த வருடத்தின் சிறந்த நடிகருக்கான ஓஸ்கார் விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சூழல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments