அமேசான் நிறுவனரான ஜெப் பெசோசின் சொத்து மதிப்பு 200 பில்லியன் அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது.
கொரோனா பெருந்தொற்றால் உலக நாடுகள் பலவும் பெரும் பொருளாதாரசரிவை சந்தித்து வருகின்றன.
இந்நிலையில் அமேசான் நிறுவனரின் சொத்து மதிப்பு வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளதாக போர்ப்ஸ் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அதாவது, இந்தாண்டின் தொடக்கத்தில் 115 பில்லியன் அமெரிக்கடொலராக இருந்த அவரது சொத்து மதிப்பு தற்போது 204.6 பில்லியன் அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது.
இம்மதிப்பானது இரண்டாம் இடத்தில் இருக்கும் பில்கேட்ஸின் சொத்து மதிப்பை விட 90 பில்லியன் அமெரிக்க டொலர் அதிகமாகும்.
இந்தத் திடீர் ஏற்றத்திற்கு, கொரோனா ஊரடங்கால் மக்கள் முழுமையாக வெளியே செல்ல முடியாத நிலை உள்ளதால் இணையவழி வர்த்தகம் அதிகரித்ததே காரணம் என கூறப்படுகிறது.