ஊழியர்களின் சராசரி சம்பளத்தை விடவும் 249 மடங்கு சம்பளம் வாங்கும் மைக்ரோசொப்ட் CEO

Report Print Givitharan Givitharan in தொழிலதிபர்

கணினி உலக ஜாம்பவானாக திகழும் மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக தற்போது Satya Nadella காணப்படுகின்றார்.

இவர் 2019 ஆம் ஆண்டு நிதியாண்டு காலப் பகுதியில் சுமார் 42.9 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஊதியமாகப் பெற்றுள்ளார்.

இத் தொகையானது அங்கு பணியாற்றும் ஏனைய ஊழியர்களின் சராசரி ஆண்டு வருமானத்தினை விடவும் 249 மடங்கு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை கடந்த வருடங்களை விடவும் இவ் வருடம் அவரது ஊதியம் 65 சதவீதம் அதிகம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த 2014 ஆம் ஆண்டிலிருந்து பிரதம நிறைவேற்று அதிகாரியின் ஊதியமானது அதிகரிக்கப்பட்டுவருவதாகவும், அவர் பதவியேற்று இன்று வரையான 5 வருட காலப் பகுதியில் மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் முதலீடானது 509 பில்லியன் டொலர்களால் அதிகரித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் தொழிலதிபர் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்