உலகின் நம்பர் 1 கோடீஸ்வரராக இருந்த அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் அந்த இடத்தை இழந்துள்ள நிலையில் மீண்டும் பில்கேட்ஸ் முதலிடத்துக்கு வந்துள்ளார்.
அமேசான் நிறுவனத்தின் நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஜெப் பெசோஸ் கடந்த 2018ஆம் ஆண்டு உலகின் நம்பர் 1 கோடீஸ்வரராக இருந்த பில்கேட்ஸை முந்தி முதலிடத்தை பிடித்தார்.
24 ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்த மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸை பின்னுக்கு தள்ளிய ஜெப்பின் திறமை மிக பெரிய அளவில் பாராட்டுகளை பெற்றது.
இந்நிலையில் அமேசான் பங்குகள் வியாழன் அன்று ஏழு சதவீத சரிவை சந்தித்த நிலையில் அவரின் சொத்து மதிப்பு $103.9 பில்லியனாக குறைந்துள்ளது.
இதன்மூலம் தற்போது $105.7 பில்லியன் சொத்து மதிப்பை கொண்ட பில்கேட்ஸ் மீண்டும் உலக கோடீஸ்வரர் வரிசையில் முதலிடத்துக்கு வந்துள்ளார்.
இது குறித்த தகவல் தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.