இந்திய பணக்காரர்கள் பட்டியலில் தொடர்ந்து 8வது முறையாக முகேஷ் அம்பானி முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
IIFL Wealth Hurun India எனும் இந்திய பணக்காரர்கள் குறித்த ஆய்வு அறிக்கையின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சொத்து மதிப்பின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள இந்தப் பட்டியலில், ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
இவர் தொடர்ந்து 8வது ஆண்டாக முதலிடத்தில் நீடிக்கிறார். இவரது சொத்து மதிப்பு 3 லட்சத்து 80 ஆயிரத்து 700 கோடி ரூபாய் ஆகும்.
இந்தப் பட்டியலில் இந்துஜா சகோதரர்கள் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளனர். இவர்களின் சொத்து மதிப்பு ஒரு லட்சத்து 86 ஆயிரத்து 500 கோடி ரூபாய் ஆகும்.
3வது இடத்தில் விப்ரோ நிறுவனர் அஸிம் பிரேம்ஜி உள்ளார். இவரது சொத்து மதிப்பு ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 100 கோடி ரூபாய் ஆகும். எல்.என்.மிட்டல் ஒரு லட்சத்து ஆயிரத்து 300 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் நான்காம் இடத்தில் உள்ளார்.
கௌதம் அதானி 94 ஆயிரத்து 500 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் 5வது இடத்தில் உள்ளார்.
இந்திய பணக்காரர்கள் பட்டியல் 2019
- முகேஷ் அம்பானி
- இந்துஜா சகோதரர்கள்
- அஸிம் பிரேம்ஜி
- லக்ஷ்மி மிட்டல்
- கௌதம் அதானி
- உதய் (Kotak)
- சைரஸ் பூனவல்லா
- சைரஸ் மிஸ்ட்ரி
- ஷபூர் பலோன்ஜி மிஸ்ட்ரி
- திலீப் ஷாங்வி