சந்தனப் பேழையில் அடக்கம் செய்யப்பட்ட சரவணவன் ராஜகோபால்... இறுதி ஊர்வலத்தின் கண்கலங்கிய மக்கள்

Report Print Santhan in தொழிலதிபர்

பெண் சபலத்தால் சரிந்த சரவணபவன் ராஜகோபால் இறுதி ஊர்வலத்தின் சந்தன பேழையில் அடக்கம் செய்யப்பட்டு செல்லப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழகத்தில் சரவணபவன் என்ற ஹோட்டல் மூலம் மிகப் பெரிய தொழிலதிபராக இருந்த சரவணபவன் ராஜகோபால், ஜோதிடம், பெண்கள் மீது ஆசை போன்றவையால எவ்வளவு உயரத்திற்கு கோபுரத்தின் உச்சிக்கு சென்றாரோ, அதே அளவிற்கு கீழே சரிந்தார்.

குறிப்பாக ஜீவஜோதியின் கணவன் கொலை வழக்கில் சிக்கிய அவரால் அதிலிருந்து இறுதியில் மிளவே முடியவில்லை, இதனால் நீதிமன்றம் அவருக்கு ஆயுள்தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.

காலம் முழுவதும் ஒரு தொழிலதிபராக தலைநிமிர்ந்து நடந்து வந்த ராஜகோபால், ஆயுள் தண்டனை கைதி என்று அறிவிக்கப்பட்டவுடன், முற்றிலும் உடைந்து போனார். இதன் காரணமாகவே படுத்த படுக்கையான அவர் இறுதியில் சிறைக்கு செல்லாமலே பரிதாபமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில் பிரேத பரிசோதனைக்கு பின் அவரின் சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் புன்னியங்குடி கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

அப்போது அங்கிருக்கும் கிராமமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டது. என்ன தான் பெண் சபலத்தால் சரிந்தாலும், அவர் செய்திருக்கும் சில நல்ல விஷயங்களால் அங்கிருந்த கிராம மக்களை அவரை கண்கடவுடன் கண்கலங்கினர்.

அதன் பின் அவரது உடல் சந்தனப்பேழையில் வைக்கப்பட்டு, ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

மேலும் தொழிலதிபர் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்