உலககோடீஸ்வரர் முகேஷ் அம்பானி வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? உறவினர்களை விட குறைவு!

Report Print Santhan in தொழிலதிபர்

உலககோடீஸ்வரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி தன்னுடைய சம்பளத்தை 15 கோடிக்கு கீழாகவே வைத்துள்ளார்.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவரும் இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காருமாக இருப்பவர் முகேஷ் அம்பானி. இவர் அந்த நிறுவனத்தில் தலைவராக பணியாற்றுவதற்காக கடந்த 2018-19-ஆம் ஆண்டில் 15 கோடிக்கு குறைவான சம்பளத்தை பெற்றுள்ளார்.

இவர் கடந்த 2008-லிருந்து 2019 முதல் இவருடைய ஆண்டு சம்பளம் 15 கோடி ரூபாயை தாண்டவில்லை. கடந்த மார்ச் 31, 2019-ல் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் செயல் இயக்குநர்களாக இருக்கும் இவரது உறவினர்கள் நிகில் மேஷ்வானி மற்றும் ஹிடல் மேஷ்வானி ஆகியோரின் சம்பளம் தலா 20.57 கோடி ரூபாய் உயர்ந்தபோதும் முகேஷ் அம்பானியின் சம்பளம் உயரவில்லை.

2018-19ஆம் ஆண்டில் அடிப்படை ஊதியம் மற்றும் படிகள் அடிப்படையில் 4.45 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. இது 2017-18ஆம் ஆண்டில் பெற்ற 4.49 கோடி ரூபாயை விடக் குறைவாகவே உள்ளது.

கமிஷன் தொகை மாற்றம் இல்லாமல் 9.53 கோடியாக உள்ளது. நிறுவனத்தின் லாபத்தால் கிடைத்த மேல் வருமானமாக 31 லட்சம் ரூபாய் அம்பானி பெற்றுள்ளார். இந்த தொகையை கடந்த ஆண்டு பெற்ற 27 லட்சம் ரூபாயிலிருந்து உயர்ந்துள்ளது. ஓய்வுக்கால பலன் தொகையாக 71 லட்சம் ரூபாய் அம்பானியின் சம்பளத்தில் அடங்குகிறது.

அக்டோபர் 2009 முதல் அம்பானி தன் ஊதியத்தை 15 கோடிக்குக் கீழாகவே பேணி வருகிறார். நிறுவனத்தின் பிற செயல் இயக்குநர்களின் சம்பளம் அதிகமானபோதும் இவருக்கு எந்த உயர்வும் இல்லை.

மாறாக, நிகில் மேஷ்வானி மற்றும் ஹிடல் மேஷ்வானி ஆகியோரின் சம்பளம் 2014-15 முதல் அதிகரித்து வருகிறது. இவர்கள் தவிர பி.எம்.எஸ். பிரசாத், பவன் குமார் கபில் ஆகியோருக்கும் சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் தொழிலதிபர் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers