சரவணபவன் ராஜகோபால் தொழிலாளர்களுக்கு இவ்வளவு செய்திருக்காரா? ஒரு ஊழியரின் நெகிழ்ச்சி வார்த்தைகள்

Report Print Santhan in தொழிலதிபர்

அண்ணாச்சி என்று ஊழியர்களால் அழைக்கப்படும் சரவணபவன் ராஜகோபால் தன்னுடைய ஊழியர்களுக்கு எவ்வளவு செய்திருக்கிறார் என்பதை அப்போதே பிரபல பத்திரிக்கை ஒன்றிற்கு ஊழியர்கள் சிலர் உருக்கமான பதில்களை கொடுத்திருக்கின்றனர்.

கடந்த 1990-களில் நியூயார்க் டைம்ஸ் சார்பாக Rollo Romig என்பவர் மயிலாப்பூரில் இருக்கும் Saravana Bhavan-ஐ சுற்றிப் பார்க்க வருகிறார்.

குறிப்பாக அவர் வெளிநாடுகளி சரவண பவன் ஹோட்டலின் தோசையை தங்க பான் கேக் என்று கூறுவார்கல், இதனால் அதன் ரகசியம் என்ன? அந்த மாவை எப்படி தயாரிக்கிறார்கள் என்பதை அறிவதற்காக வந்திருந்தார்.

அப்போது அங்கிருந்த ஊழியர் ஒருவரிடம் உங்கள் அண்ணாச்சி எப்படி என்று தான் கேட்டுள்ளார்.

அதற்கு அவர், அவர் நம்மை நம்ம குடும்பத்தில் ஒருவராக பார்த்து கொள்வார். எந்த பிரச்சனை என்றாலும் தைரியமாக சொல்லலாம்.

அதன் பின் அந்த பிரச்சனையை அவர் பார்த்து கொள்வார். சொந்த ஊருக்கு செல்ல வேண்டும் என்றால், தனியாக பணம் கொடுத்து அனுப்புவார்.

அவருக்கு சொந்த ஊரில் மரியாதை எப்படி என்ற போது, அது எப்படி கூற முடியும், அவர் மீது அந்த கிராமமக்கள் அதிக அளவு மரியாதையும், பாசமும் வைத்துள்ளனர்.

சலுகைகள் பற்றி கேட்ட போது, ஆம் அவர் ஊழியர்களுக்கு நிறைய சலுகைகள் செய்கிறார். எங்களுக்கு ஒரு செல்போன், ஒரு பைக்கு, பைக்குக்கு பெட்ரோல் போட பணம், தினமும் பேப்பர் வாங்கி தனியாக அனைவரும் படிக்க வேண்டும் என்று கூறுவார்.

பல ஆண்டுகள் முடி வெட்டுவதற்கு கூட காசு கொடுத்து வந்தார். ஆனால் சமீபகாலமாக தான் அது நிறுத்தப்பட்டது. சலுகைகள் நிறுத்தப்பட்டதா என்று கேள்விக்கு, சலுகைகள் கூடிக் கொண்டே போகும் தானே தவிர, குறையாது.

குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், வண்டிக்கு பெட்ரோல், வண்டி ரிப்பேர் ஆனால் அதை சரி செய்வதற்கு கூட பணம் கொடுத்திருக்கிறார் என்று முடித்துள்ளார்.

மேலும் தொழிலதிபர் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்