சரவணபவன் ராஜகோபால் உண்மையில் எப்படி? அவரின் மறுப்பக்கத்தை கேட்டால் கல்லும் கரையும்

Report Print Santhan in தொழிலதிபர்

ஜீவஜோதியின் கணவரின் கொலைக்கு காரணமான சரவணபவன் ராஜாகோபாலின் மறுபக்கத்தைப் பார்த்தா, இவர் தான் இப்படியா? என்றளவிற்கு பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலகெங்கும் தன்னுடைய சுவையால் சரவணபவன் ஹோட்டல் கிளைகளை பரப்பி வந்த, ராஜகோபால், ஒரு புறம் பெண்ணாசையால் கொலை செய்யும் அளவிற்கு சென்றாலும், அவர் தன் ஹோட்டல்களில் வேலை பார்த்த ஊழியர்கள் மீது மிகுந்த அக்கறையுடனே இருந்துள்ளார்.,

ஆரம்பத்தில் ஹோட்டல்களில் சுவையான உணவுகளை கொடுத்த போது, நஷ்டம் ஏற்பட்டது. இதனால் விலை மலிவான மளிகைப் பொருட்களை வாங்கினால், நஷ்டம் ஏற்படாது, ஊழியர்களின் ஊதியத்தையும் குறைக்கலாம் என்று அதிகாரிகள் அவருக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர்.

ஆனால் ராஜகோபால் அது போன்று செய்யாமல் இது போன்று அறிவுரை வழங்கிய அதிகாரிகளை வேலையிலிருந்து நீக்கினார். அதன் தரமான உணவுகளை மட்டும் வழங்கிய அவர், ஊழியர்களின் பணிச் சூழலையும் நல்ல விதமாக வைத்திருந்ததே அவர் இந்த அளவிற்கு உயர காரணமாக இருந்தது.

சாப்பாடு தட்டின் மீது வாழை இலை வைக்கும் முறையை கொண்டு வந்தவர் ராஜகோபால் தான், அதற்கும் அவர் சொன்ன காரணம், வாழை இலை வைத்தால், ஊழியர்கள் தட்டு கழுவும் வேலை எளிதாகும் என்று கூறியுள்ளார். அதைத் தொடர்ந்து மாதந்தோறும் ஊழியர்களை முடி வெட்ட சொன்னதற்கு முக்கிய காரணம், முடி அதிகமாக இருந்தால், சாப்பாட்டுகளில் விழுந்துவிடும்.

இதை தவிர்ப்பதற்கே அப்படி செய்துள்ளார். வேலை நேரத்தில் ஊழியர்களுக்கு சோர்வு ஏற்படக் கூடாது என்பதால் இரவு நேர சினிமா பார்க்க சரவண்பவன் ஊழியர்கள் யாருக்கும் அனுமதி கிடையாது. சரவண பவன் ஹோட்டலில் சேர்ந்தால் கடைசி வரை பணிக்கு உத்தரவாதம் என்று நம்பி அப்போதிருந்த ஊழியர்கள் நம்பி சேர்ந்தனர்.

தங்கள் ஹோட்டல்களின் கிளைகளில் வேலை பார்க்கும், குடும்பத்தினர் வெளியூரில் வசித்து வந்தால், அவர்களுக்கு ஆண்டு தோறும் சிறப்பு விடுமுறை, அதுமட்டுமா? ஒவ்வொரு ஊழியர்களின் முதல் இரண்டு குழந்தைகளின் கல்வி செலவுகளையும் இவரே ஏற்றுள்ளார்.

அதற்கு அவர், ஒரு ஊழியரின் குடும்பத்தை நல்லபடி பார்த்துக் கொள்ள வழிவகுத்தாலே போதும் அவரால் உற்பத்தி சிறப்பாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

மேலும் தொழிலதிபர் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers