உலக கோடீஸ்வரர் அனில் அம்பானிக்கு ஏற்பட்ட நிலை! அந்தஸ்தை இழந்து நிற்கும் பரிதாபம்

Report Print Santhan in தொழிலதிபர்

இந்தியாவின் கோடீஸ்வரர் அனில் அம்பானி சொத்து மதிப்பு தற்போது அதாள பாதத்திற்கு சென்றுள்ளதால், அவர் கோடீஸ்வரர் என்ற அந்தஸ்தை இழந்துள்ளார்.

கடந்த 2008-ஆம் ஆண்டு உலகில் பெரும் கோடீஸ்வரர்களின் வரிசையில் 6-ஆம் இடத்தில் இருந்தார்.

ஆனால் தற்போது அவரின் சொத்து மதிப்பு அதாளபாதளத்திற்கு சென்றுள்ளதால், வெறும் 11 ஆண்டுகளில் அவரது பங்கு மதிப்பு 3,651 கோடி ரூபாயாக (523 மில்லியன் டாலர்கள்) சரிந்துள்ளது.

இதில் அடமானத் தொகையும் அடக்கம். இதன் காரணமாக பில்லியனர் என்ற அந்தஸ்தை அவர் இழந்துள்ளார்.

கடந்த ஜூன் 11-ஆம் திகதியன்று அவரது தோராயமான பங்கு மதிப்பு (அடமான பங்குகள் நீங்கலாக) 765 கோடி ரூபாயாக சுருங்கியது.

அவர் பயன்படுத்தி வரும் பம்பார்டியர் குளோபல் எக்ஸ்பிரஸ் ஜெட் விமானத்தின் விலையை ( 50 மில்லியன் டாலர்கள்) காட்டிலும் இத்தொகை இருமடங்கு தான் அதிகமாகும்.

4 மாதங்களுக்கு முன்பு கூட அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குரூப்ஸ்ன் மதிப்பு 8,000 கோடி ரூபாயாக இருந்தது.

ரிலையன்ஸ் குரூப்ஸ் பெற்ற கடன் தொகைக்கு ஈடாக வங்கிகள் பெற்றிருந்த அடமான பங்குகளை கடன் தொகை திருப்பச் செலுத்த காலவிரயமானதால் வங்கிகள் விற்பனை செய்த பின்னர் அந்நிறுவனத்தின் மதிப்பு மேலும் சரிவை சந்தித்துள்ளது.

கடந்த 2018 மார்ச் நிலவரப்படி நிலையன்ஸ் குழும நிறுவனங்களின் மொத்த கடன் மதிப்பு 1.7 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இதன் பின்னர் சில நிறுவனங்களையும், சொத்துக்களையும் விற்பனை செய்து இந்த தொகையில் கணிசமான அளவு ரிலையன்ஸ் நிறுவனம் திருப்பிச் செலுத்தியுள்ளது.

அனில் அம்பானியின் சகோதரர் முகேஷ் அம்பானி உலககோடீஸ்வரர்களின் பட்டியலில் 19-வது இடத்திலும், ஆசியாவில் 2-வது இடத்திலும் உள்ளார்.

மேலும் தொழிலதிபர் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்