உலகின் இளம் வயது பில்லியனரான அழகிய பெண்: சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Report Print Raju Raju in தொழிலதிபர்

கெய்லி ஜென்னர் என்ற மொடல் அழகி மேக்கப் அலங்கார தொழில் செய்து வரும் நிலையில் அவரை உலகிலேயே செல்வந்தரான இளம் பெண் என போர்ப்ஸ் பத்திரிக்கை தேர்வு செய்துள்ளது.

21 வயதேயான மொடல் அழகியும் தொலைக்காட்சி நட்சத்திரமுமான கெய்லி ஜென்னர் தனது பெயரில் மேக்கப் அலங்காரப் பொருட்களை கடந்த 2016ம் ஆண்டில் அறிமுகம் செய்தார்.

கெய்லியின் அலங்கார பொருட்களின் தரம் அவரை உலகம் முழுவதும் பிரபலமடைய செய்தது.

இதையடுத்து சுய சம்பாத்தியத்தால் உலகின் இளம் செல்வந்தர் தகுதியைப் பெற்றவர் என கெய்லியை போர்ப்ஸ் பத்திரிகை தேர்வு செய்துள்ளது.

அவரது சொத்து மதிப்பு சுமார் 100 கோடி டொலர்கள் என கணக்கிடப்பட்டுள்ளது.

கெய்லி இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரபல மாடல் அழகி கிம் கர்தாசியானின் ஒன்று விட்ட சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் தொழிலதிபர் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்