வரலாற்றில் முதல் முறையாக சாதனை படைத்த முகேஷ் அம்பானி

Report Print Deepthi Deepthi in தொழிலதிபர்

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வியாழக்கிழமை நடப்பு நிதி ஆண்டின் மூன்றாம் காலாண்டு அறிக்கையை வெளியிட்டது.

அதில் எதிர்பார்த்ததை விட லாபம் 7.7 சதவீதம் உயர்ந்து 10,251 கோடி ரூபாயாக உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இது இந்திய நிறுவனங்களின் வரலாற்றில் முதல் முறையாக நடந்துள்ளது.

ஒரு காலாண்டில் 10,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வருவாய் பெற்ற முதல் இந்திய தனியார் நிறுவனம் என்ற பெருமையை அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ் பெற்றுள்ளது.

ரிலையன்ஸின் அனைத்து வணிகங்களின் ஒருங்கிணைக்கப்பட்ட வருவாய் 9.1 சதவீதம் உயர்ந்து 1.56 லட்சம் கோடி ரூபாயை டிசம்பர் மாதத்துடன் முடிந்த காலாண்டில் பெற்றுள்ளது.

வட்டி மற்றும் வரிக்கு முந்தைய வருவாய் 13.4 சதவீதம் உயர்ந்து 4,053 கோடி ரூபாயாக உள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ ஒவ்வொரு பயனர்களிடமிருந்து சராசரியாக 130 ரூபாயாய் மூன்றாம் காலாண்டில் வருவாயாகப் பெற்றுள்ளது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் எண்ணெய் சுத்திகரிப்பில் ஒரு பேரலுக்கு 8.8 டாலரை லாபமாகப் பெற்றுள்ளது. ரீடெயில் துறையில் வருவாய் 9.7 சதவீதம் உயர்ந்து 35,577 கோடி ரூபாயாய் ரிலையன்ஸ் அடைந்துள்ளது. இதுவே செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த இரண்டாம் காலாண்டில் 9.5 டாலராக இருந்தது.

மேலும் தொழிலதிபர் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers