24,000 ரூபாய் தான் முதலீடு.. இப்போது 8 கோடி ரூபாய் வரை கிடைக்கிறது: லாரி டிரைவர் நெகிழ்ச்சி

Report Print Santhan in தொழிலதிபர்
343Shares
343Shares
ibctamil.com

சென்னையைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு படித்த நபர் 24,000 ரூபாய் முதலீடிலிருந்து இன்று 8 கோடி ரூபாய் வரை வருமானம் வரும் அளவிற்கு பெரிய தொழிலதிபராக மாறியுள்ளார்.

சென்னை ஒரகடம் பகுதியைச் சேர்ந்தவர் ரகு. பத்தாம் வகுப்பு மட்டுமே படித்திருக்கும் இவர் சென்னை பெருங்கலத்தூரில் Everest Cement Pipes என்ற கம்பெனியை நடத்தி வருகிறார்.

இவரிடம் மூன்றுக்கும் மேற்பட்ட இன்ஜினியர்கள் 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் என ஏராளமானோர் வேலை செய்து வருகின்றனர்.

இது குறித்து இவர் கூறுகையில், என்னுடைய வீடு சிறிய குடிசை வீடு, ஒரகடத்தில் தான் தங்கி படித்து வந்தேன். மழை வரும் நேரத்தில் என் விட்டின் பல பகுதிகளில் தண்ணீர் வடியும், இதனால் நான் வீட்டின் தண்ணீர் வராத இடத்தை நோக்கி ஒளிந்து கொள்வேன்.

இப்படி தொடர்ந்து படித்து வந்த நான் பத்தாம் வகுப்பு முடித்தவுடன் சென்னையில் உள்ள Leather Institute-ல் படிப்பதற்காக விண்ணப்பித்தேன்.

அங்கு ஜாதிச் சான்றிதழ் கேட்டதால், ஜாதி சான்றிதழுக்கு விண்ணப்பித்தேன். என்னுடைய பூர்விகம் ஊட்டி என்பதால் ஊட்டியில் இருபாலர்கள் இருக்கின்றனர். அதனால் ஜாதி சான்றிதழ் வழங்கமுடியாது என்று கூறி அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.

அதன் பின் டிரைவராக வேலை செய்ய ஆரம்பித்தேன். அதன் மூலம் பலரின் நட்பு கிடைத்தது. டிரைவராக இருந்த போது நான் பலருக்கும் என்னுடைய வாகனத்தில் சிமெண்ட் சீட்களை இறக்கி வந்தேன்.

இப்படி தொடர்ந்து வேலை பார்த்து வந்ததன் பயனாக என்னிடம் ஒரு 24,000 ரூபாய் பணம் இருந்தது. அதை வைத்து 20,000 ரூபாய்க்கு சிமெண்ட் பலகைகளை வாங்கினேன். மீதம் இருந்த 4,000 ரூபாய்க்கு மற்ற பொருட்களை வாங்கினேன்.

இதை விற்பதற்காக பலரையும் நாட வேண்டியிருந்தது. அதன் பின் பொருளையும் விற்றேன். இப்படி தான் என்னுடைய தொழில் ஆரம்பித்தது.

கடந்த 2009-ஆம் ஆண்டு இந்த தொழிலை விரிவுபடுத்த வேண்டும் என்று எண்ணினேன். இதனால் விழுப்புரத்தில் உள்ள வங்கியில் ஒரு லட்சம் ரூபாய் லோன் கேட்டேன்.

ஆனால் அவர்களோ இந்த வங்கியில் நீண்ட நாட்கள் வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் சிபாரிசு செய்தால் மட்டுமே லோன் கொடுக்க முடியும் என்று கூறினர்.

இதனால் அதற்காகவும் இரண்டு பேரை நான்கு நாட்களில் தேடி பிடித்தேன், சிபாரிசுக்காக அவர்கள் வந்த போதும் 50,000 ரூபாய் மட்டுமே லோன் கொடுத்தனர்.

அதை வைத்து படிப்படியாக என்னுடைய தொழிலை விரிவுபடுத்தினேன். கடந்த 2013-ஆம் ஆண்டு MSME என்ற பெயரில் சென்னையில் என்னுடைய கம்பெனியை பதிவு செய்தேன்.

என்னுடைய வெற்றிக்கு முக்கிய காரணம் ஞாயிற்று கிழமை தான், ஏனெனில் ஞாயிற்று கிழமைகளில் பெருமளவில் வேலை செய்யமாட்டார்கள்.

நானே அந்த நாட்களில் வாகனத்தை எடுத்து சிமெண்ட் சீட்களை உரிய இடத்திற்கு எடுத்துச் சென்று டெலிவரி செய்துவிடுவேன். இதனாலே வாடிக்கையாளர்கள் என்னை தேடி வருகின்றனர்.

அதுமட்டுமின்றி Barathiya Yuva Sakthi Trust மூலம் எனக்கு 10 லட்சம் ரூபாய் வங்கியில் லோன் கிடைத்தது. அதை நான் அடுத்த 18 மாதங்களில் அடைத்து விட்டேன்.

இப்போது நான் 44 லட்சம் ரூபாய் கேட்டு வங்கியில் லோன் கேட்டுள்ளேன். அதையும் அவர்கள் கிடைக்கும் என்று உறுதி அளித்துள்ளனர்.

பத்தாம் வகுப்பு மட்டுமே படித்திருக்கும் என்னிடம் தற்போது 4 இன்ஜினியர் மற்றும் 20-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை பார்த்து வருவதாகவும், தன்னுடைய கம்பெனியின் ஆண்டு வருமானம் தற்போது 8 கோடியை தாண்டிச் செல்வதாக பெருமையாக கூறியுள்ளார்.

மேலும் தொழிலதிபர் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்