டுவிட்டர் சிஇஓ-வின் சம்பளம் என்ன தெரியுமா? கேட்டா அசந்துடுவீங்க

Report Print Raju Raju in தொழிலதிபர்

டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் இணை நிறுவனரான ஜாக் டோர்சே 2017-ம் ஆண்டு வரை தொடர்ந்து மூன்றாவது முறையாக தனக்கு எந்த சம்பளமும் வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.

டுவிட்டர் நிறுவனத்தின் நீண்ட கால வளர்ச்சி மதிப்பினை கருதி தலைமை நிர்வாக அதிகாரியான ஜாக் 2017-ம் ஆண்டுக்கான சம்பளத்தினைப் பெறவில்லை என்பது அமெரிக்கச் செக்யூரிட்டி & எக்ஸ்சேஞ் கமிஷனில் தாக்கல் செய்த அறிக்கை மூலமாகத் தெரியவந்துள்ளது.

ஜாக் வசம் டுவிட்டர் நிறுவனத்தில் உள்ள பங்குகளின் மதிப்பு சென்ற ஆண்டு மட்டும் 20 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.

2018 ஏப்ரல் திகதி தேதி வரை டுவிட்டர் நிறுவனத்தில் ஜாக்-குக்கு 18 மில்லியன் பங்குகள் உள்ளதாகவும் அதன் மதிப்பு 529 மில்லியன் அமெரிக்க டொலர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

தலைமை நிர்வாக அதிகாரி சம்பளம் பெறாத நிலையில் டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியான நெட் சீகல் 2017-ம் ஆண்டு 14.3 மில்லியன் டொலர் ரூபாயினைச் சம்பளமாகப் பெற்றுள்ளார்.

2016 ஆம் ஆண்டில், ஜாக் தனிப்பட்ட செலவுகள் மற்றும் குடியிருப்புப் பாதுகாப்பு செலவினங்களுக்க 68,506 அமெரிக்க டொலர்களை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தொழிலதிபர் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்