முகேஷ் அம்பானியின் புதிய தொழில்

Report Print Deepthi Deepthi in தொழிலதிபர்
299Shares

2015 ஆகஸ்ட் மாதத்தில் ரிசர்வ் வங்கி வெளியிட்ட பேமெண்ட்ஸ் வங்கிகளுக்கான உரிமம் பெற்ற நிறுவனங்கள் பட்டியலில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-ம் ஒன்று.

இந்நிறுவனத்துடன் சேர்த்து மொத்தம் 11 நிறுவனங்களுக்கு ரகுராம் ராஜன் தலைமையிலான ரிசர்வ் வங்கி பேமெண்ட்ஸ் வங்கி அமைக்க உரிமம் பெற்றது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் ஜியோவின் அறிமுகம் மற்றும் அதன் வர்த்தகத்தில் அதிகப்படியான கவனத்தை இதுநாள் வரையில் செலுத்தி வந்த நிலையில், தற்போது ஜியோ வாடிக்கையாளர்களுக்கு மதிப்பு கூட்டுச் சேவையாக இருக்க வேண்டும் எனத் திட்டமிட்டுப் பேமெண்ட்ஸ் வங்கி தாமதம் செய்து அறிமுகம் செய்துள்ளது.

இந்நிலையில் ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பில், ஏப்ரல் 3, 2018 முதல் ஜியோ பேமெண்ட்ஸ் வங்கி லிமிடெட் நிறுவனம் இயங்க துவங்கியுள்ளது எனத் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் ஜியோ வாடிக்கையாளர்கள் இனி ஜியோ மியூசிக், ஜியோ சினிமா ஆகிய சேவைகளுடன் பேமெண்ட்ஸ் வங்கி சேவையையும் பெறலாம்.

மேலும் தொழிலதிபர் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்