புதுசா கல்யாணம் ஆகியிருக்கா? இந்த நிதி ஆலோசனையை கண்டிப்பாக படிக்கவும்

Report Print Gokulan Gokulan in தொழிலதிபர்

ஒவ்வொரு புதுமண தம்பதியினரும் தங்களது இல்வாழ்வைத் துவங்கும் போது காதல் கலந்த உற்சாகத்துடன் தான் துவங்குவர்.

அப்படி சீராக சென்று கொண்டிருக்கும் வாழ்க்கை ஓட்டத்தில், எத்தனையோ புதுமண தம்பதியினர்களுக்குள் விரிசல் விடுவதை நாம் பார்த்திருக்கிறோம்.

இதற்கு பல தனிப்பட்ட காரணங்கள் இருந்தாலும், நிதி கூட ஒரு முக்கியமான காரணம் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.

திருமணத்திற்கு முன்பு பெற்றோர்களின் அரவணைப்புடன், அவர்களது நிழல் சார்ந்து இருப்பதால் நிதி நிர்வாகம் பற்றி அவ்வளவு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

ஒரு குடும்பத்தை நன்றாக வழிநடத்தும் பெருமை குடும்ப தலைவர், தலைவியான நமது தாய் தந்தையரயே சேரும்.

சிறுவயதிலிருந்தே குடும்ப சூழ்நிலை மற்றும் வரவு செலவு பற்றி அறிந்திருந்தால் இந்த நிதி விவகாரத்தில் சாமத்தியமாக பிழைக்க இயலும்.

தம்பதியினர் தங்களது வாழ்க்கை முறை எதிர்பார்ப்புகள் குறித்து மனம் விட்டு பேசி, அதற்கேற்ற பட்ஜெட்டை வகுத்துக்கொள்ள வேண்டும்.

பொதுவான சேமிப்பு கணக்குகள் வைத்துக்கொள்வதன் மூலம் குடும்ப செலவுகளை திறம்பட நிர்வகிக்கலாம்.

வருங்காலத்தில் எப்படி இருப்போம் என்று நினைக்கையில், அவரவர் இறந்தகால விடயங்கள் குறித்து தீர்வு காண்பதில் கவனம் செலுத்தினால் நன்மை பயக்கும்.

உதாரணத்திற்கு பெற்றோர்களால் ஏதேனும் கடன் இருப்பது, வீடு வாகனம் போன்றவற்றிற்கு தனி தனி நிதி என ஒதுக்கினால் சுமூகமான தீர்வு கண்டு நிதி நிர்வாகம் செய்யலாம்.

குடும்பத்தில் சார்ந்திருப்பவர்களுக்கு பொருளாதார நோக்கில் உதவி செய்ய வேண்டிய சூழல் இருக்கலாம். இது குறித்து வெளிப்படையாக துணையிடம் பேசி விடுவது நல்லது.

குடும்பத்தினருக்கு உதவுவது தனிப்பட்ட விருப்பம் சார்ந்தது என்றாலும், தம்பதியர் இது குறித்து மனம் திறந்து பேசிக்­கொள்­ள வேண்டும்.

சேமிப்பு, முதலீடு, கடன்கள், காப்பீடு மற்றுமல்லாமல் தேவையற்ற செலவுகளையும் தவிர்த்தால் இன்பமாக வாழலாம்.

”நோயற்ற வாழ்வே குறைவற்றசெல்வம்” ஆம் இந்த நிதி நிர்வாகத்தன்மை இல்லாததும் ஓர் நோய் தான். இதை தவிர்த்து நிதி கொள்கையை வகுத்துக்கொள்வது நன்று.

மேலும் தொழிலதிபர் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்